15-ஆண்டுகளுக்கு மேலாக இருக்கும் வாகனங்களை அழிக்க முடிவு: மறுபரிசீலனை செய்ய சிட்டிசன் வாய்ஸ் கடிதம்.!!

15-ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாட்டில் இருக்கும் வாகனங்களுக்கான அனுமதியை ரத்து செய்யும் முடிவை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று சிட்டிசன் வாய்ஸ் கோயம்புத்தூர் அமைப்பினர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.


கோவை: 15-ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாட்டில் இருக்கும் வாகனங்களுக்கான அனுமதியை ரத்து செய்யும் முடிவை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று சிட்டிசன் வாய்ஸ் கோயம்புத்தூர் அமைப்பினர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

மிக சமீபத்தில் ஊடகம் மற்றும் செய்தித்தாள் வாயிலாக 15-வருடங்களும் அதற்கு மேலும் உபயோகத்தில் உள்ள வாகனங்கள் அனைத்தும் திரும்பப்பெற அல்லது சாலையில் பயணிக்க அனுமதியை வாபஸ் பெறும் நடவடிக்கைகள் மத்திய அரசால் கொண்டு வரப்படலாம் என்கிற செய்தி வந்து கொண்டிருக்கிறது.

15-ஆண்டுகளுக்கு மேலும் வாகனங்கள் சாலையில் இயக்கப்படும் என்றால் அப்படிப்பட்ட வாகனங்களுக்கு மறு பதிவு 8-மடங்கு வரை அதிகரிக்கப்பட உள்ளது. மேற்படி செய்தி, வாகனம் பயன்படுத்தும் அனைவருக்கும் மிகுந்த அதிர்ச்சியையும் நம்ப முடியாத மன வேதனையையும் அளிக்கிறது. இன்று சாமானிய மக்கள் அனேகமாக இருசக்கர அல்லது நான்கு சக்கர வாகனங்களைப் பயன்படுத்தும் நிலை உள்ளது. அவர்களுக்கு இது மிகப் பெரிய கவலையை/சுமையை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தியா போன்ற வளரும் நாட்டிற்கு இதுபோன்ற சிந்தனையும் நடவடிக்கையும் தற்போதைய கோவிட்-19 கால கட்டத்தில் தேவையும் அவசியமும் இல்லை என்று கருதுகிறோம். மாறாக இதுபோன்ற நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டால் அது ஏகபோக முதலாளிகளையும், பெரும் வியாபார மையங்களுக்கு மட்டுமே பயன் தரும்.

அதே சமயத்தில் சாதாரண ஏழை-எளிய மக்கள் ஏற்கனவே கொரோனா போன்ற ஆட்கொல்லி நோயால் பாதிக்கப்பட்டும் பொருளாதார மந்தநிலை காரணமாக மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி இருக்கும் மக்களுக்கு என்ன செய்வது என்று அறியா நிலை உள்ளது.

நம் நாட்டில் தற்போதுள்ள கலாச்சார வழக்கங்கள் அடிப்படையில், ஒருவர் மிதிவண்டியோ அல்லது இரு சக்கர, நான்கு சக்கர மோட்டார் வாகனமோ வைத்திருக்கும் பட்சத்தில் 2-அல்லது 30-ஆண்டுகள் வரை கூட நல்ல முறையில் பராமரித்து பயன்படுத்தி வருகின்றனர். எனவே மக்களின் நலனுக்காக இப்படிப்பட்ட சிந்தனையை மத்திய அரசு தற்போதைக்கு கைவிட வேண்டும் என்று வேண்டிக் கேட்டுக்கொள்கிறோம்.

மத்திய அரசு வாகன உற்பத்தியாளர்களை தொடர்பு கொண்டு 15-ஆண்டுகளுக்கும் மேலான வாகனங்களைத் தொடர்ந்து சாலையில் இயக்க குறைந்த செலவில் சரியான பராமரிப்பு செய்து கொடுப்பது என்பதும் உசிதமாக இருக்கும். மேற்கண்ட எங்கள் கருத்தை பரிசீலித்து தகுந்த நடவடிக்கையை மத்திய அரசு எடுக்கும் என நம்புகிறோம்.

இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...