கோவை அருகே வீசி எறியப்படும் இறைச்சி கழிவுகள், குப்பைகள் - தொற்று நோய் பரவும் அபாயம்..!!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகுந்த சிரமப்படுவதாகவும், ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.


கோவை: கோவை ஜி எம் நகர் கோட்டை புதூர் அருகே வீசி எறியப்படும் இறைச்சி கழிவுகள், குப்பைகளால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.



கொரோனா தொற்று பரவி வரும் நிலையில், கோயம்புத்தூர் சிங்கை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 74வது வார்டு, ஜி எம் நகர் கோட்டை புதூர் பின்புறம் உள்ள பகுதியில் வீசி எறியப்படும் இறைச்சி கழிவுகள், இறந்து கிடக்கும் நாய்கள், குப்பைகள் என அனைத்தும் அழுகிய நிலையில் துர்நாற்றம் வீசுகின்றது.



மேலும், அங்கு குப்பைகளை கொட்டுவதற்கு குப்பை தொட்டிகளும் இல்லை. குப்பைகளை அப்புறப்படுத்துவதும் இல்லை. பல மாதங்களாக அப்பகுதியில் இதே நிலை தொடர்ந்து வருகின்றது.



இதன் காரணமாக கொசுத் தொல்லை மற்றும் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.



குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகுந்த சிரமப்படுகின்றனர். ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை என்று குற்றம்சாட்டினர்.



எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பிரச்சனைக்கு செவிசாய்க்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...