வால்பாறையில் தொழிற்சங்கத் தலைவரை சந்தித்து தொழிலாளர் மகிழ்ச்சி.!!

கோவை: வால்பாறையில் தேயிலைத் தோட்டம் தொழிளலர்களுக்கு சம்பளம் உயர்வு வழங்கியதை அடுத்து தொழிற்சங்கம் தலைவருக்கு தொழிலாளர்கள் நன்றி தெரிவித்தனர்.


கோவை: வால்பாறையில் தேயிலைத் தோட்டம் தொழிளலர்களுக்கு சம்பளம் உயர்வு வழங்கியதை அடுத்து தொழிற்சங்கம் தலைவருக்கு தொழிலாளர்கள் நன்றி தெரிவித்தனர்.

கோவை மாவட்டம் வால்பாறையில் தோட்டத்தொழிலாளர்களின் நீண்டகால கோரிக்கையான சம்பள உயர்வு குறித்து சமீபத்தில் தமிழக அரசு தோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 425 ரூபாய் 40 பைசாவாக அறிவித்து அதற்கான அரசாணையை வெளியிடப்பட்டது.

இதைத்தொடர்ந்து தோட்டத்தொழிலாளர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்து தமிழக முதல்மைச்சர் மற்றும் அனைவருக்கும் நன்றி தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் வால்பாறை அருகே உள்ள பன்னிமேடு முதல் டிவிசனை சார்ந்த தி.மு.க வார்டு செயலாளர் பால் பாண்டி தலைமையில், முப்பதுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் எல்.பி.எப்.தொழிற்சங்க தலைவர் கோழிக்கடை கணேசனை அலுவலகத்தில் சந்தித்து அவருக்குச் சால்வை அணிவித்து மகிழ்ச்சியடைந்தனர்.

இந்நிகழ்ச்சியில், கோவை தெற்கு மாவட்ட தி.மு.க இளைஞரணி துணை அமைப்பாளர் மகுடீஸ்வரன், தெற்கு மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர் வடைக்கடை குட்டி என்ற தமிழ்செல்வன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Newsletter

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...