கோவை: கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட முக்கிய சாலையில் இரண்டு நாட்களாக செப்டிக் டேங்க் நிறைந்து, சாலையில் சாக்கடை நீர் ஆறு போல ஓடிக் வருவதால், பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
கோவை: கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட முக்கிய சாலையில் இரண்டு நாட்களாக செப்டிக் டேங்க் நிறைந்து, சாலையில் சாக்கடை நீர் ஆறு போல ஓடிக் வருவதால், பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இதன் காரணமாக அந்த பகுதியில் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கோவை 72 -வது வார்டுக்கு உட்பட்ட இமானுவேல் ஆலயத்திற்கு எதிரே உள்ள ஹெட் குவார்ட்டர்ஸ் ரோடு பகுதியில் சாலையின் மேல் பகுதியில் உள்ள செப்டிக்டேங் நிறைந்து இரண்டு நாட்களாக தண்ணீர் சாலைகளில் ஆறு போல ஓடிக் கொண்டுள்ளது.

அந்த பகுதியில் நடக்கக்கூடிய நடைபாதை பயணிகள், வாகனத்தில் செல்லக்கூடியவர்கள், என அனைவரும் அதைக் கடந்து மிதித்து செல்ல வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டு உள்ளனர். மேலும் தொற்று பரவி வரும் காலத்தில் இது போன்ற சுகாதாரமற்ற சம்பவங்களினால் அந்த பகுதி முழுவதும் கொசு, ஈ, புழுக்கள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால், புதிய நோய் தொற்றுகள் உருவாக வழிவகுக்கும் என்று பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் இப்பகுதியில் தொற்றுநோய் பரவும் முன், மாநகராட்சி தலையிட்டு உடனடியாக இந்த பிரச்சனையை சரி செய்ய வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.