கோவை: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று கோவை வழியாக குன்னூர் செல்லவுள்ளார். ராணுவ அதிகாரிகளுடன் கலந்துரையாடல்.
கோவை:இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று நீலகிரி மாவட்டம், குன்னூரில் உள்ள வெலிங்டன் ராணுவ பயிற்சி மையத்தில் நடைபெறும் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்குபெற, டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு கோவை சூலூர் விமான தளத்திற்கு 12.10 மணிக்கு வருகிறார்.
டில்லியில் இருந்து விமானத்தில் கோவை வந்து, அங்கிருந்து ஹெலிகாப்டரில் ஊட்டி ஜிம்கானா மைதானத்திற்கு செல்ல இருந்த நிலையில், இன்று வானம் மேகமூட்டமாக காணப்படுவதால், அவர் சாலை மார்க்கமாக குன்னூர் செல்ல உள்ளார்என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், நீலகிரி மாவட்டம், குன்னுார் வெலிங்டனில் உள்ள ராணுவ பயிற்சி கல்லுாரியில், இந்தியா உட்பட 30 நாடுகளை சேர்ந்த முப்படைஅதிகாரிகளுடன், கலந்துரையாடலில் பங்கேற்கவுள்ளார். தொடர்ந்து, ராணுவ பயிற்சி கல்லுாரி மற்றும் மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டரை பார்வையிடுகிறார்.
நாளை (29ம் தேதி) காலை, முப்படை பயிற்சி அதிகாரிகளிடம் உரை நிகழ்த்துகிறார்.
தொடர்ந்து, ஹெலிகாப்டரில் கோவை வந்து அங்கிருந்து டில்லி புறப்படுகிறார். அவரது வருகையையொட்டி, 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
காலநிலையில் மாற்றம் ஏற்பட்டால், மாற்று ஏற்பாடாக, மேட்டுப்பாளையம் - கோத்தகிரி சாலை தயார் படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, சாலை மார்க்கமாக அவர் குன்னூர் வெலிங்டன் ராணுவ மையத்தை அடைகிறார்.