மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் குன்னூர் வருகை.

கோவை: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று கோவை வழியாக குன்னூர் செல்லவுள்ளார். ராணுவ அதிகாரிகளுடன் கலந்துரையாடல்.


கோவை:இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று நீலகிரி மாவட்டம், குன்னூரில் உள்ள வெலிங்டன் ராணுவ பயிற்சி மையத்தில் நடைபெறும் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்குபெற, டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு கோவை சூலூர் விமான தளத்திற்கு 12.10 மணிக்கு வருகிறார். 

டில்லியில் இருந்து விமானத்தில் கோவை வந்து, அங்கிருந்து ஹெலிகாப்டரில் ஊட்டி ஜிம்கானா மைதானத்திற்கு செல்ல இருந்த நிலையில், இன்று வானம் மேகமூட்டமாக காணப்படுவதால், அவர் சாலை மார்க்கமாக குன்னூர் செல்ல உள்ளார்என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மத்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், நீலகிரி மாவட்டம், குன்னுார் வெலிங்டனில் உள்ள ராணுவ பயிற்சி கல்லுாரியில், இந்தியா உட்பட 30 நாடுகளை சேர்ந்த முப்படைஅதிகாரிகளுடன், கலந்துரையாடலில் பங்கேற்கவுள்ளார். தொடர்ந்து, ராணுவ பயிற்சி கல்லுாரி மற்றும் மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டரை பார்வையிடுகிறார்.

நாளை (29ம் தேதி) காலை, முப்படை பயிற்சி அதிகாரிகளிடம் உரை நிகழ்த்துகிறார். 

தொடர்ந்து, ஹெலிகாப்டரில் கோவை வந்து அங்கிருந்து டில்லி புறப்படுகிறார். அவரது வருகையையொட்டி, 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

காலநிலையில் மாற்றம் ஏற்பட்டால், மாற்று ஏற்பாடாக, மேட்டுப்பாளையம் - கோத்தகிரி சாலை தயார் படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, சாலை மார்க்கமாக அவர் குன்னூர் வெலிங்டன் ராணுவ மையத்தை அடைகிறார்.

Newsletter

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...