நெகமம் - வடசித்தூர் ரோட்டில் பெண்ணிடம் இருந்து 2-சவரன் நகை பறிப்பு: காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை.!!

கோவை: நெகமம் - வடசித்தூர் ரோட்டில் பெண்ணிடம் இருந்து 2-சவரன் நகை பறித்து சென்றதால் காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: நெகமம் - வடசித்தூர் ரோட்டில் பெண்ணிடம் இருந்து 2-சவரன் நகை பறித்து சென்றதால் காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை சாய்பாபா காலனி பகுதியைச் சேர்ந்தவர் வெள்ளிங்கிரி, இவரது மனைவி ஆனந்தி(54), இவர் கோவையில் ஆடிட்டராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் நேற்று முன்தினம், நெகமம் வடசித்தூர் அருகே இவருக்குச் சொந்தமான இடத்தை பார்வையிட்டு விட்டு பின்னர், இரவு இருசக்கர வாகனத்தில் வட சித்தூரில் உள்ள அவரது உறவினர் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, அவரை பின்தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள், ஆனந்தியின் கழுத்திலிருந்த 2-சவரன் தங்கச் சங்கிலியைப் பறித்து விட்டுத் தப்பினர்.

இது தொடர்பாக நேற்று நெகமம் போலீசில் ஆனந்தி புகார் கொடுத்ததின் பேரில், காவல்துறை வழக்குப் பதிவு செய்து செயின் பறிப்பில் ஈடுபட்ட நபர்களைத் தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...