இலவச வீட்டு மனை பட்டா கோரி கொங்குநாட்டான் புதூர் பொதுமக்கள் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகை.!!

கோவை: இலவச வீட்டு மனை பட்டா கோரி கொங்குநாட்டான் புதூர் பொதுமக்கள் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.




கோவை: இலவச வீட்டு மனை பட்டா கோரி கொங்குநாட்டான் புதூர் பொதுமக்கள் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

பொள்ளாச்சி அருகே உள்ள கொங்குநாட்டான்புதூர் கிராமத்தில், நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு வசிக்கும் மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வேண்டும் எனக்கோரி, இன்று நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

பின்னர், அவர்களிடம் பொள்ளாச்சி சார் ஆட்சியர் தாக்கரே சுபம் ஞானம் தேவ் ராவ் பேச்சுவார்த்தை நடத்தினார். பல ஆண்டுகளாக வீட்டுமனை பட்ட இன்றி தவித்து வரும் பொதுமக்களுக்கு அரசு இடம் வழங்கி வீடுகள் கட்டித்தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.



பொது மக்களின் குறைகளைக் கேட்டறிந்த சார் ஆட்சியர், கோரிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, தகுதியான நபர்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார். இதையடுத்து, முற்றுகையில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Newsletter

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...