பொள்ளாச்சி அரசு கலைக் கல்லூரியில் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த மாணவர்களுக்குக் கலந்தாய்வுக் கூட்டம்.!!

கோவை: பொள்ளாச்சி அரசு கலைக் கல்லூரியில் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த மாணவர்களுக்குக் கலந்தாய்வுக் கூட்டம் நேற்று தொடங்கியது.


கோவை: பொள்ளாச்சி அரசு கலைக் கல்லூரியில் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த மாணவர்களுக்குக் கலந்தாய்வுக் கூட்டம் நேற்று தொடங்கியது.

பொள்ளாச்சி மகாலிங்க புரம் பகுதியில் உள்ள பாரதியார் பல்கலைக்கழக அரசு கலை அறிவியல் கல்லூரியில், பி.ஏ. ஆங்கிலம், பி.எஸ்.சி. கணிதம், பி.பி.ஏ, பி.காம் சி.ஏ, பி.காம் உள்ளிட்ட பாடப்பிரிவுகள் உள்ளன.

இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் ஆன்லைன் வாயிலாகப் பெறப்பட்டன. இதுவரை 1,712-மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதில் சிறப்புப் பிரிவுகளுக்கான மாணவர்களுக்குக் கலந்தாய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

கலந்தாய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்ட அரசு கல்லூரி முதல்வர் ராஜ்குமார் உள்ளிட்ட ஆசிரியர்கள் மாணவர்களின் ஆவணங்களைச் சரி பார்த்தனர். இதில், மாற்றுத்திறனாளி பிரிவில் 4-பேரும், தேசிய மாணவர் படைப் பிரிவில் ஒருவரும், விளையாட்டுப்பிரிவில் 9-பேரும், முன்னாள் இராணுவத்தினரின் வாரிசுகள் பிரிவில் ஒருவரும் என மொத்தம் 15-மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.



இந்த முறை ஆன்லைன் வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டதால், தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்து மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதில், உள்ளூர் மாணவ மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதோடு, வெளிமாவட்டத்தில் உள்ள மாணவர்களுக்கும் கல்லூரியில் இடம் வழங்கப்படும்.

இதனால் கல்லூரியில் காலியிடங்கள் இருக்காது. அனைத்து பாடப் பிரிவுகளிலும் மாணவர் சேர்க்கை முழுமையாகப் பூர்த்தி செய்யப்படும் என்று, தெரிவித்த ஆசிரியர்கள், நேற்று தொடங்கியுள்ள இந்த மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக் கூட்டம், செப்டம்பர் 1-ஆம் தேதி வரை நடைபெறும் எனவும் தெரிவித்தனர்.

Newsletter

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...