கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2021 - 2022ம் கல்வி ஆண்டில் பட்டப் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை இன்று தொடங்கி 31ம் தேதி வரை நடைபெற உள்ளது.

மாணவர் சேர்க்கையை கல்லூரி முதல்வர் முனைவர் ஸ்ரீதரன் தொடங்கி வைத்தார். கடந்த 24ம் தேதி சிறப்பு ஒதுக்கீடு திட்டப்படி மாற்றுத் திறனாளிகள்.ஓய்வு பெற்ற ராணுவத்தினர் குடும்பத்தினருக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு சேர்க்கை நடைபெற்றது.
தொடர்ந்து பொதுப் பிரிவிற்கான சேர்க்கை இன்று முதல் பிஏ தமிழ் 50, பிஏ இங்க்லீஷ் 60, பிஜிஏ 60, பிபிஏ 60, பிஎஸ்சி கணினியல் 60, பிஎஸ்சி ஐடி 60, பிகாம் 60, பிகாம் சிஏ 60 இடங்கள் என 520 இடங்கள் நிரப்பப்படுகின்றன.
மாணவர்கள் தமிழக அரசு வழிகாட்டுதலின்படி முக கவசம் அணிந்து தங்களது பெற்றோருடன் சேர்க்கைக்கு வந்திருந்தனர். கல்லூரிக்கு வந்த மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு கை சுத்திகரிப்பு திரவம் வழங்கப்பட்டு உடல் வெப்பமானி பரிசோதனைக்குப் பின் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

மாணவர் சேர்க்கை பணிகளில் முதல்வர் முனைவர் ஸ்ரீதரன், பேராசிரியர்கள் பெரியசாமி, மகாலட்சுமி உட்பட உதவி பேராசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.