பொள்ளாச்சி அருகே மர்மமான முறையில் தண்ணீரில் மூழ்கி ஒருவர் பலி - கொலையா என போலீசார் தீவிர விசாரணை!

கோவை: பொள்ளாச்சி அருகே நவமலை மலைவாழ் மக்கள் குடியிருப்புப் பகுதியில் மீன்பிடிக்கச் சென்றபோது மர்மமான முறையில் தண்ணீரில் மூழ்கி காளி என்பவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: பொள்ளாச்சி அருகே நவமலை மலைவாழ் மக்கள் குடியிருப்புப் பகுதியில் மீன்பிடிக்கச் சென்றபோது மர்மமான முறையில் தண்ணீரில் மூழ்கி காளி என்பவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொள்ளாச்சி அருகே உள்ள நவமலை மலைவாழ் மக்கள் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் காளி, இவரும் அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பர்கள் முத்து, பாண்டி உள்ளிட்ட மூவரும் நேற்று நவமலை ஆற்றில் மீன்பிடிக்கச் சென்று உள்ளனர்.

அப்போது மூவரும் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. காளி மீன் பிடிக்க ஆற்றில் இறங்கியதாக கூறப்படுகிறது. நீண்ட நேரமாகியும் காளி தண்ணீர் இருந்து வெளியில் வராததால் தேடிப் பார்த்த நண்பர்கள் அக்கம் பக்கம் உள்ள பொதுமக்கள் மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து, அங்கு விரைந்த ஆழியார் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி இறந்த நிலையில் இருந்த காளியின் உடலை மீட்டனர்.



உடலில் காயங்கள் இருந்ததால் அவரை யாராவது அடித்து கொலை செய்தார்களா? என்ற சந்தேகத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும், இறந்தவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Newsletter

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...