மத்திய அரசின் ஜவுளித்துறை சார்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சமர்த் திட்டத்தின் கீழ் இலவசப்பயிற்சியுடன் வேலை வாய்ப்பு பெறத் திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் ராஜா சண்முகம் அழைப்பு.!!

திருப்பூர்: மத்திய அரசின் ஜவுளித்துறை சார்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சமர்த் திட்டத்தின் கீழ் இலவசப்பயிற்சியுடன் வேலை வாய்ப்பு பெறத் திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் ராஜா சண்முகம் அழைப்பு விடுத்துள்ளார்.


திருப்பூர்: மத்திய அரசின் ஜவுளித்துறை சார்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சமர்த் திட்டத்தின் கீழ் இலவசப்பயிற்சியுடன் வேலை வாய்ப்பு பெறத் திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் ராஜா சண்முகம் அழைப்பு விடுத்துள்ளார்.

திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் ராஜா சண்முகம். மத்திய அரசின் ஜவுளித் துறை சார்பாகக் கடந்த 2-ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சமர்த் திட்டத்தின் மூலம் வெளி மாவட்டம் மற்றும் மாநிலங்களைச் சேர்ந்த 18-வயதிற்கு மேற்பட்ட தகுதியுடையவர்களுக்குப் பின்னலாடை நிறுவனங்களில் 45-நாட்களில் மானியத்துடன் கூடிய பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

அவர்களுக்குக் கட்டாய வேலை வாய்ப்பு உறுதி செய்யப்பட்டு வருவதாகவும் ஆனால் அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டு ஆண்டுகளாக ஊரடங்கு காரணமாக அவை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள முடியாத சூழ்நிலையில் இந்த ஆண்டு திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தின் மூலம் 16-ஆயிரத்து 500-பேருக்குப் பயிற்சி அளித்து அவர்களுக்கான வேலைவாய்ப்பு உறுதிப்படுத்திக் கொள்ள மத்திய அரசு வழிவகை செய்து இருப்பதால் 18-வயது நிரம்பிய வேலை இல்லாத யாரானாலும் இத்திட்டத்தின் மூலம் மானியத்துடன் 45-நாட்களில் பின்னலாடை தொழிலை கற்று மத்திய அரசின் சான்றுடன் கட்டாய வேலை வாய்ப்பை பெற்றுக் கொள்ளலாம்.

இதன் மூலம் நாட்டில் வேலை இல்லா திண்டாட்டத்தைக் குறைக்கவும் திருப்பூர் பின்னலாடை துறையினர் ஆட்கள் பற்றாக்குறை பிரச்சினையைச் சமாளிக்க முடியும் என்பதால் வெளிமாவட்ட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் திருப்பூருக்குத் தாராளமாக வந்து தொழில் கற்றுக் கொள்ளலாம்.

மாற்றுத்திறனாளிகளுக்கும் அவர்களுக்கு ஏற்றார்போல பயிற்சி வழங்கப்பட்டு அவர்களுக்கான வேலைவாய்ப்பையும் உறுதி செய்வதாகத் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...