வால்பாறை: வால்பாறையில் உயர் அழுத்த மின் பாதை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கோவை மாவட்டம் வால்பாறை நகரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகளும் சுமார் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. கடந்த சில மாதங்களாக வால்பாறை பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது.
இதனால் வணிக நிறுவனங்கள் மற்றும் பொது மக்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். இதனைப் போக்க புதிய உயர் அழுத்த மின் பாதை அமைக்கும் பணியைத் தமிழ்நாடு மின்சார வாரியம் மேற்கொண்டுள்ளது.
இதனடிப்படையில், கீழ்ப்பகுதியிலிருந்து உயரழுத்த மின் வழிப்பாதை உருவாக்க புதிய கம்பங்கள் நடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் ஒரு கட்டமாக வால்பாறையில் உள்ள அண்ணாநகர் நடு மலைச்சாலையில் உயர் அழுத்த மின் பாதை அமைக்க காங்கிரிட் கம்பங்கள் நடும் பணியை வால்பாறை மின்வாரியத்தை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.