கோவையில் தடை செய்யப்பட்ட 230 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்; இருவர் கைது.

தடை செய்யப்பட்ட 2 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் 230 கிலோ பறிமுதல். 2 பேர் கைது.


கோவை: கோவையில் தடை செய்யப்பட்ட 2 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் 230 கிலோ பறிமுதல். 2 பேர் கைது.

கோவை சாய்பாபா காலனி போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் புகையிலை பொருட்களையும், செல்போன், பைக் உட்பட்ட பொருட்களை கைப்பற்றினர்.

அப்போது, அவர்களிடமிருந்து 230 கிலோ1,333 பாக்கெட் புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.அதன் மதிப்பு 2 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. மேலும், பிடிபட்டவர்களிடம் இருந்து ரொக்கப்பணம் 1 லட்சத்து 44 ஆயிரத்து 800, மற்றும் 3 செல்போன்கள், யமஹா பைக் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

மேலும், விசாரணையில் கைது செய்யப்பட்டவர்கள், கோவை ஒண்டிப்புதூர் திருவள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்த விக்னேஷ் 26, மற்றும் ஒண்டிப்புதூர், சிந்துநகரை சேர்ந்த ஆல்வின் 29, என்பதும் தெரியவந்துள்ளது.

Newsletter

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...