கோவை: கோவை மாவட்டம் மரக்கானத்தில் கடந்த இரண்டு நாட்களாக மரக்கான கால்பந்தாட்ட கிளப் நடத்திய ஓபன் டூ ஆல் கால்பந்தாட்ட போட்டி கோவை புதூரில் சிறப்பாக நடத்தப்பட்டது.

இந்த போட்டியில் சுமார் 32 அணிகள் களம் கண்டது. வால்பாறை அணியும் மரக்கால் அணியும் மோதிய இறுதி போட்டி மிகவும் சுறுசுறுப்பாக நடைபெற்றது. இந்த போட்டியில் மரக்காணம் அணி ஒரு கோல் போட்ட நிலையில், வால்பாறை அணி நான்கு கோல்களை அடித்து வெற்றிக்கோப்பையை தட்டிச் சென்றது.
வால்பாறை கால்பந்தாட்ட கிளப் கேப்டனான மாசாணி தலைமையிலான அணியினர் வெற்றிக்கோப்பையுடன் வெற்றிக்கொண்டாட்டத்தில் இன்று வால்பாறை நகர்பகுதி வழியாக சென்றனர்.
அப்போது, பொதுமக்கள் வாழ்த்துக்கூறி அவர்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர். மேலும், இதுபோன்ற துடிப்பான இளம் வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் கிடப்பில் போடப்பட்டுள்ள நகராட்சி கால்பந்தாட்ட மைதான பணிகளை விரைந்து முடித்து உதவ, சம்பந்தப்பட்ட நகராட்சி ஆணையாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.