கோவை: பொள்ளாச்சி சூளேஸ்வரன்பட்டி அருகே மதுக்கடை முன்பு இரு சக்கர வாகனம் திருடிய நபரை, துரத்திப் பிடித்த இளைஞர்கள் கிழக்கு போலீசில் ஒப்படைத்தனர்.

பொள்ளாச்சி ஊத்துக்காடு ரோடு பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் குமார் (26), நேற்று முன்தினம் இவர், சூளேஸ்வரன்பட்டி டாஸ்மாக் கடை முன்பு வாகனத்தை நிறுத்திவிட்டு, நண்பருடன் கடைக்குச் சென்று இருந்தார்.
அப்போது, அடையாளம் தெரியாத இருவர், இருசக்கர வாகனத்தை திருடி சென்றதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து, கார்த்திக் குமார் மற்றும் அவரது நண்பர் பைக்கை திருடிய இருவரை துரத்திப் பிடித்தனர். பிறகு கிழக்கு போலீசில் இருவரையும் ஒப்படைத்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், நேரு நகர் பகுதியில் நாகமணி(19), சதாம் உசேன்(20) ஆகிய இருவரிடம் விசாரணை மேற்கொண்ட போலீசார், இருசக்கர வாகனத்தை திருடியது தொடர்பாக வழக்கு பதிவு செய்து, இருவரையும் நேற்று கைது செய்தனர்.