கோவை: அடுக்கு மாடி குடியிருப்புகளை இலவசமாகக் கொடுக்க கோரி, செல்வபுரத்தைச் சேர்ந்த மக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளனர்.

மக்கள் குறைத்திற்கும் நாளான இன்று, செல்வபுரத்தைச் சார்ந்த மக்கள் அடுக்கு மாடி குடியிருப்புகளை தங்களுக்கு இலவசமாக கொடுக்க கோரி மனு அளித்துள்ளனர்.
கடந்த 2018 ஆம் ஆண்டு தங்களது குடியிருப்புகளை இடித்து விட்டு அடுக்கு மாடி குடியிருப்புகள் அமைத்துத் தருவதாகக் கூறி சுமார் 120 குடும்பங்கள் வெளியேறினர்.
அதனை அடுத்து, 18 மாதங்கள் கட்டுமான பணி நடைபெற்று முடிவடைந்தது. அடுக்கு மாடி குடியிருப்பைப் பற்றி விசாரித்த போது, 1,72,600 தொகையைச் செலுத்த வேண்டும் என்றார்கள்.
இதில் 12,600 ரூபாயை முன் பணமாகச் செலுத்தவும் பாக்கி தொகையை வாங்கி கடன் மூலம் செலுத்தவும் கூறினார்கள். கடந்த 45 வருடங்களாக செல்வ புரத்தில் தான் வசித்து வருகின்றோம்.

மேலும், இங்கு உள்ள அனைவருமே கூலி வேலை செய்பவர்கள் தான் அதனால், இந்த அடுக்கு மாடி குடியிருப்பை இங்கு உள்ள மக்களுக்கு இலவசமாக வழங்கக் கோரி மனு அளித்துள்ளனர்.
மக்கள் குறைத்திற்கும் நாள் அன்று மாவட்ட ஆட்சியர் இல்லாததால், மனு பெட்டியில் தங்களின் மனுக்களைப் போட்டு விட்டுச் சென்றனர்.