கொரோனா தொற்று குறைவு எதிரொலி.!! கோவை அரசு மருத்துவமனையில் அனைத்துப் பிரிவுகளும் செயல்படும் மருத்துவக் கல்லூரி டீன் நிர்மலா தகவல்.!!

கோவை: கொரோனா தொற்று குறைந்த காரணத்தால், கோவை அரசு மருத்துவமனையில் உள்ள அனைத்துப் பிரிவுகளும் செயல்படும் என மருத்துவக் கல்லூரி டீன் நிர்மலா தெரிவித்துள்ளார்.



கோவை: கொரோனா தொற்று குறைந்த காரணத்தால், கோவை அரசு மருத்துவமனையில் உள்ள அனைத்துப் பிரிவுகளும் செயல்படும் என மருத்துவக் கல்லூரி டீன் நிர்மலா தெரிவித்துள்ளார்.

கோவையில், கொரோனா தொற்று குறைந்து வருவதால் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனைத்துப் பிரிவுகளிலும், அனைத்து விதமான சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா நோய்த் தொற்றுக்காக 1,200க்கும் மேற்பட்ட படுக்கைகளுடன் சிறப்புச் சிகிச்சைப் பிரிவு ஏற்படுத்தப்பட்டது.

இதையடுத்து, அரசு மருத்துவமனையில் மற்ற நோயாளிகளைக் காட்டிலும், கொரோனா நோயாளிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வந்தது. தற்போது, கோவையில் நோய்த் தொற்றுப் பரவல் குறைந்துள்ளதால் அரசு மருத்துவமனையில் அனைத்து துறைகளிலும் அனைத்து விதமான சிகிச்சைகள் மீண்டும் அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அரசு மருத்துவமனை முதல்வர் அ.நிர்மலா கூறியதாவது:–

கொரோனா பாதிப்பால் அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கான சிகிச்சைக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வந்தது.

இதனால் அரசு மருத்துவமனையில் சாதாரணமாக மேற்கொண்டு வந்த பல்வேறு சிகிச்சைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. மிக அவசர சிகிச்சைக்கு மட்டுமே வர நோயாளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

மேலும் கருப்புப் பூஞ்சை நோயாளிகளுக்கு அதிக அளவு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதனால் மற்ற துறைகளில் முக்கிய, அவசர அறுவை சிகிச்சைகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வந்தன.

இந்நிலையில், கோவையில் தற்போது கொரோனா நோய்த் தொற்று தினசரி எண்ணிக்கை 200 -க்கும் கீழ் குறைந்துள்ளதால் அரசு மருத்துவமனைக்கு வரும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.

இதனால் அனைத்து துறைகளிலும் அனைத்து விதமான சிகிச்சைகள், அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ள துறை சார்ந்த மருத்துவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

Newsletter

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...