திருப்பூர்: திருப்பூரில் ஆர்பிடோ ஆசியா என்ற நிறுவனத்தின் பத்தாவது இரத்தப் பரிசோதனை மையம் திறப்பு விழா நடைப்பெற்றது.

திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி நிறுவனத்திற்குத் தேவையான மெஷின்களை விற்பனை செய்து வரும் மேகலா மெஷின் என்ற நிறுவனம் தற்பொழுது மருத்துவத் துறையில் மக்களுக்கான சேவையைத் துவக்கும் விதமாக, ஆர்பிடோ ஆசியா என்ற பெயரில் இரத்த பரிசோதனை மையம் துவங்கப்பட்டு சென்னை, கோவை, மதுரை, தஞ்சாவூர் ஆகிய பகுதிகளில் மக்களுக்கான 50-சதவிகித சலுகை கட்டணத்தில் சிறந்த சேவையை வழங்கி வருகிறது.
இந்த இரத்த பரிசோதனை மையத்தின் பத்தாவது புதிய கிளை திறப்பு விழா ரயில் நிலையம் அருகில்நடைபெற்றது. இந்த ரத்தப் பரிசோதனை நிலையத்தினை மேகலா மெஷின் உரிமையாளர் சுப்பிரமணியம் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

கொரோனா காலத்தில் இரத்த பரிசோதனைகள் முடிவுகள் வருவதற்குத் தாமதம் ஆகும் நிலையை மாற்றி மிக குறைந்த கட்டணத்தில் அதி நவீன மெஷின்கள் மூலமாக விரிவாகப் பரிசோதனை செய்யப்பட்டுத் தரப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியில், ஆர்பிடோ ஆசியா ரத்தப் பரிசோதனை நிலையத்தின் உரிமையாளர் மருத்துவர் தரணி, இந்திய மருத்துவ சங்கம் திருப்பூர் கிளையின் முன்னாள் தலைவர் மருத்துவர் முருக நாதன், குமரன் மருத்துவமனை தலைவர் செந்தில் குமரன், ரேவதி மருத்துவமனை தலைவர் மருத்துவர் ஈஸ்வரமூர்த்தி, இந்திய மருத்துவ சங்கம் திருப்பூர் கிளையின் செயலாளர் மருத்துவர் பழனிச்சாமி உள்ளிட்ட மருத்துவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.