திருப்பூரில் நார் தொழிற்சாலையில் பணியாற்றிய சிறுவன் நார்கள் பதப்படுத்தும் குழியில் விழுந்து பரிதாபமாக உயிரிழப்பு!

திருப்பூர்: திருப்பூரில் நார் தொழிற்சாலையில் பணியாற்றிய சிறுவன் நார்கள் பதப்படுத்தும் குழியில் விழுந்து பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர்: திருப்பூரில் நார் தொழிற்சாலையில் பணியாற்றிய சிறுவன் நார்கள் பதப்படுத்தும் குழியில் விழுந்து பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே குரல்குட்டை என்ற கிராமத்தில் ஸ்ரீ பாலாஜி காயர்ஸ் என்ற நார்த் தொழிற்சாலை இயங்கி வருகிறது கொரோனா காலம் என்பதால் பள்ளிகள் இன்னும் இயங்காத காரணத்தால் அதே பகுதியைச் சேர்ந்த கேசவன்(14) என்ற ஒன்பதாம் வகுப்பு மாணவன் பணியாற்றி வந்துள்ளார்.

இந்த நிலையில், இவர் பணியின் போது எதிர்பாராதவிதமாக நார்கள் கொட்டப்பட்டுள்ள குழியில் தவறி விழுந்துள்ளார். இவர் குழிக்குள் விழுந்தவுடன் மலைபோல் குவிந்து இருந்த நார்கள் இவர் மீது சரிந்து விழுந்தது.

இதனையடுத்து, அவரை உடனடியாக மீட்டு முதலுதவி அளித்தனர். ஆனால், அவர் மூச்சுத்திணறலால் இறந்துவிட்டார். இதன்பின் உடுமலை காவல் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இறந்த கேசவனின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்

மேலும், இச்சம்பவம் தொடர்பாக நார் தொழிற்சாலை உரிமையாளர் மற்றும் மேற்பார்வையாளர் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Newsletter

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...