பொள்ளாச்சி அருகே கர்ப்பிணிப் பெண்ணுக்கு 108 ஆம்புலன்சில் பெண் குழந்தை பிறந்தது.!! அவசரம் கருதி பிரசவம் பார்த்த ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு பொதுமக்கள் பாராட்டு.!!

கோவை: பொள்ளாச்சி அருகே கர்ப்பிணிப் பெண்ணுக்கு 108 ஆம்புலன்சில் பெண் குழந்தை பிறந்தது. அவசரம் கருதி பிரசவம் பார்த்த ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு பொதுமக்கள் மத்தியில் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.


கோவை: பொள்ளாச்சி அருகே கர்ப்பிணிப் பெண்ணுக்கு 108 ஆம்புலன்சில் பெண் குழந்தை பிறந்தது. அவசரம் கருதி பிரசவம் பார்த்த ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு பொதுமக்கள் மத்தியில் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.

பொள்ளாச்சி அருகே உள்ள நல்லூர் கிராமத்தில், வசிக்கும் நிர்மலா தேவி என்ற பெண்ணுக்கு, நேற்று பிரசவ வலி ஏற்பட்டதால், அவரது உறவினர்கள் 108 ஆம்புலன்சை தொடர்பு கொண்டனர்.

இதையடுத்து அங்கு விரைந்து சென்ற 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள், பிரசவ வலியில் துடித்துக் கொண்டிருந்த நிர்மலா தேவியை பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இந்நிலையில் அவருக்கு பிரசவ வலி அதிகரித்ததால், ஊழியர்கள் அவசரம் கருதி ஆம்புலன்சில் நிர்மலா தேவிக்கு பிரசவம் பார்த்தனர். இதில் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.

பின்னர், தாய் மற்றும் குழந்தைக்கு, முதலுதவி அளித்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள், அவர்களை பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அனுமதித்தனர்.

அவசரம் கருதி ஆம்புலன்சில் பிரசவம் பார்த்த ஊழியர்களுக்கு பொதுமக்கள் மத்தியில் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.

Newsletter

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...