கோவை: பொள்ளாச்சியில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி பிறந்தநாள் விழா காங்கிரஸ் கட்சி சார்பில் கொண்டாடப்பட்டது.

கோவை தெற்கு மாவட்டம் நகர வட்டார காங்கிரஸ் கமிட்டிகள் சார்பில் பொள்ளாச்சி, வால்பாறை, கிணத்துக்கடவு,ஆனைமலை உட்பட பல்வேறு பகுதிகளில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி அவர்களின் 77-வது பிறந்த நாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
பொள்ளாச்சியில் நகரக் காங்கிரஸ் கமிட்டி தலைவர் செந்தில்குமார் தலைமையில், நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் என்.கே.பகவதி கலந்து கொண்டு விளையாட்டு வீரர்களுக்குப் பரிசுகள் வழங்கினார்.
மாவட்ட திமுக பொறுப்பாளர் மருத்துவர் வரதராஜ் கலந்து கொண்டு ராஜிவ் காந்தி படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.