கோவையில் ஆயுர்வேத வலி நிவாரண மசாஜ் சென்டரில் விபச்சாரம்; 3 பெண்கள் மீட்பு

கோவை: கோவையில் கடந்த சில நாட்களாக மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபச்சாரம் நடைபெற்று வருவதாக எழும் புகாரின் பேரில், போலீசார் ரெய்டு மூலமாக சமந்தப்பட்ட நபர்களை கைது செய்தும், விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட பெண்களை மீட்கும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.


கோவை: கோவையில் கடந்த சில நாட்களாக மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபச்சாரம் நடைபெற்று வருவதாக எழும் புகாரின் பேரில், போலீசார் ரெய்டு மூலமாக சமந்தப்பட்ட நபர்களை கைது செய்தும், விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட பெண்களை மீட்கும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக, கோவை சக்தி ரோடு பகுதியில் கிங்ஸ் கேரளா ஆயுர்வேதிக் வலி நிவாரண மையம் என்ற பெயரில் மசாஜ் சென்டர் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு துடியலூர் ரோடு சரவணம்பட்டி பகுதியைச் ராஜேஷ் 33, (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் சிகிச்சைக்காக சென்றுள்ளார்.

அப்போது, அங்கு இருந்த ஒருவர் கூடுதலாக பணம் கொடுத்தால் இளம் பெண்களிடம் உல்லாசமாக இருக்கலாம் என்று அவரிடம் கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த லோகேஷ், பணம் எடுத்து விட்டு வருவதாக கூறிவிட்டு, சரவணம்பட்டி போலீசாரிடம் இதுகுறித்து புகார் அளித்துள்ளார்.

புகாரின் பேரில், சரவணம்பட்டி போலீசார் அந்த மசாஜ் சென்டருக்கு, சாதாரண உடையில் வாடிக்கையாளர் போல் சென்று விசாரித்தனர். அப்போது, அங்கு இளம் பெண்களை வைத்து விபச்சாரம் செய்வது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, இளம்பெண்களை வைத்து விபச்சாரம் நடத்தியதாக, தொண்டாமுத்தூர் காந்திஜி காலனி பகுதியை சேர்ந்த மோகன்ராஜ் (34), திருப்பூர் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த தனலட்சுமி (22) ஆகிய இரண்டு புரோக்கர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும், அங்கு விபச்சாரத்திற்காக தங்க வைக்கப்பட்டிருந்த சென்னை கண்ணதாசன் நகர் பகுதியைச் சேர்ந்த 23 வயது பெண், கிருஷ்ணகிரி மாவட்டம் கீரமங்கலம் பகுதியைச் சேர்ந்த 32 வயது பெண் மற்றும் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 26 வயது பெண் ஆகிய 3 பெண்களையும் மீட்டு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

Newsletter

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...