வால்பாறை: தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்குத் தினசரி ஊதியமாக ரூபாய் 426 அறிவித்த தமிழக முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து பட்டாசு வெடித்து தி.மு.கவினர் கொண்டாடினர்.

கோவை மாவட்டம் வால்பாறையில் சுமார் 50-ஆயிரத்துக்கும் மேற்பட்ட தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்களுக்கு 3-ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
ஜூன் மாதமே ஊதிய ஒப்பந்த முடிவுற்ற நிலையில், தேயிலைத் தோட்ட நிர்வாகங்கள் தொழிற்சங்கங்கள் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். இதில் எவ்வித முடிவும் எட்டப்படாத இருந்து வந்தது.
இந்நிலையில், பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் டாக்டர் வரதராஜன் வால்பாறை நகரச் செயலாளர் பால் பாண்டி தொழிற்சங்க தலைவர் கோழிக்கடை கணேசன் ஆகியோர் தொழில் துறை அமைச்சரைப் பலமுறை சந்தித்து தோட்டத்தொழிலாளர் சம்பள உயர்வில் தீர்வு எட்டப்படாமல் இருப்பதைச் சுட்டிக்காட்டி முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு சென்று நடவடிக்கை மேற்கொள்ளும்படி கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதனைத் தொடர்ந்து இன்று நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தில், தமிழகத்தில் உள்ள அனைத்து தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கும் தினசரி ஊதியமாக ரூ.426-என்று அறிவித்துள்ளார்கள்.

இதனை முன்னிட்டு வால்பாறையில் உள்ள நகராட்சி திமுக முன்னாள் கவுன்சிலர் செல்வம் தலைமையில், திமுகவினர் பட்டாசு வெடித்து மகிழ்ந்தனர். தொடர்ந்து கலைஞர் வாழ்க தளபதி வாழ்க முகஸ்டாலின் வாழ்க என்று வாழ்த்திப் பாராட்டிக் கோஷமிட்டனர்.