கோவை கிணத்துக்கடவு அருகே கொண்டம்பட்டி பகுதியில் உள்ள ஸ்ரீ ஈஸ்வர் பொறியியல் கல்லூரியில் அதி நவீன மேக்கர்ஸ்பேஸ் வளாகம் திறப்பு!

கோவை: கோவை கிணத்துக்கடவு அருகே கொண்டம்பட்டி பகுதியில் உள்ள ஸ்ரீ ஈஸ்வர் பொறியியல் கல்லூரியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அதி நவீன மேக்கர்ஸ்பேஸ் வளாகத் திறப்பு விழா இன்று நடைபெற்றது.


கோவை: கோவை கிணத்துக்கடவு அருகே கொண்டம்பட்டி பகுதியில் உள்ள ஸ்ரீ ஈஸ்வர் பொறியியல் கல்லூரியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அதி நவீன மேக்கர்ஸ்பேஸ் வளாகத் திறப்பு விழா இன்று நடைபெற்றது.

VVDN டெக்னோலஜிஸ் நிறுவனத்தின் பொறியியல் துறையின் உபதலைவர் பாலகுமார் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஸ்ரீ ஈஸ்வர் மேக்கர்ஸ்பேஸ் வளாகத்தைத் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.



விழாவில் கல்லூரியின் முதல்வர் சுதா மோகன்ராம் அனைவரையும் வரவேற்று பேசிய போது, மாணவர்களின் தொழில்நுட்பத் திறனை மேம்படுத்தி, அவர்கள் செயற்கை நுண்ணறிவு மற்றும் ஐ.ஓ.டி போன்ற வளர்ந்து வரும் தொழில் நுட்பங்களில் சிறந்த ப்ராஜெக்ட்கள் செய்ய இந்த வளாகத்தில் அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.



இதைத்தொடர்ந்து விழாவின் சிறப்பு விருந்தினர் பாலகுமார் பேசும் போது, தொழில் துறையின் தேவைகளைக் கண்டறிந்து அவற்றைத் தகுந்த பாட திட்டங்கள் மற்றும் இது போன்ற ஆய்வகங்கள் மூலம் பூர்த்தி செய்யும் கல்லூரியின் முயற்சியைப் பாராட்டினார்.

மேலும், கல்லூரியின் இயக்குனர் ராஜாராம் பேசும் போது, இந்த வளாகத்தில் சுமார் நூறு பேர் அமர்ந்து ப்ராஜெக்டுகள் செய்ய வசதிகளும், ஐ.ஓ.டி தொழில் நுட்பத்தில் பயிற்சி மற்றும் ப்ராஜெக்டுகள் செய்ய ஒரு பிரத்தியேகப் பிரிவு, தவிர கலந்துரையாடல் அரங்கம் மற்றும் ப்ராஜெக்டுகளை மேற்பார்வை செய்ய ஆசிரியர்களுக்கான அறைகளும் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.



கல்லூரியின் தொழில் துறை நல்லுறவு இயக்குனர், கண்ணன் நரசிம்மன், தொழில் துறையின் தேவைகளைக் கண்டறிந்து பூர்த்தி செய்ய, கல்லூரி தொடர்ந்து எடுத்து வந்துள்ள பல முயற்சிகளைப் பட்டியலிட்டு பேசினார்.

விழாவின் முடிவில் கல்லூரியின் மின்னணு மற்றும் தகவல் பொறியியல் துறையின் பேராசிரியர் சண்முகசுந்தரம் நன்றி கூறினார்.

Newsletter

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...