கோவை: கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் நடைபெற்றுவரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் கோபால் சுன்கரா இ.ஆ.ப. இன்று (19.08.2021) நேரில் பார்வையிட்டு ஆய்வு ஆய்வு மேற்கொண்டார்.

கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்.96-க்குட்பட்ட சுந்தராபுரம், லோகநாதபுரம் பகுதியில் குடிநீர் விநியோகிப்பதற்காக 20-இலட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதியதாகக் கட்டிமுடிக்கப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டியிலிருந்து அப்பகுதியில் விரைவில் குடிநீர் விநியோகிக்கப் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்படவுள்ள நீர்த்தேக்கத்தொட்டியை பார்வையிட்ட ஆணையாளர்.

தொடர்ந்து 98-வது வார்டுக்குட்பட்ட காந்திநகர், 94வது வார்டுக்குட்பட்ட எம்.ஜி.ஆர்.நகர், வார்டு எண்.99, வெள்ளலார், இட்டேரி ஆகிய பகுதிகளில் பாதாளச் சாக்கடை பணிகளுக்காக பொக்லைன் இயந்திரங்கள் மூலம் குழிகள் தோண்டப்பட்டு குழாய்கள் பதிக்கும் பணிகள் நடைபெற்றுவருவதைப் பார்வையிட்டு, விரைவில் இப்பணிகளை முடித்திட வேண்டுமென உத்தரவிட்ட ஆணையாளர், வார்டு 95, அன்னை இந்திரா நகர் பகுதியில் வீடுகளில் உள்ள கழிவு நீரை வெளியேற்றுவதற்காகப் பாதாளச் சாக்கடை குழாய்களில் இணைப்புக் குழாய்கள் பொருத்தப்பட்டுவரும் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்ததைத் தொடர்ந்து,

வார்டு 100, முத்து நகர் பகுதியில் கழிவு நீர் வெளியேற்று நிலையம் (pumping station)கட்டப்பட்டுவரும் பணிகள் நடைபெற்றுவருவதை ஆய்வு மேற்கொண்ட மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப., இப்பணிகளைத் தொய்வின்றி விரைந்து முடிக்குமாறு தொடர்புடைய அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது, செயற்பொறியாளர் ஞானவேல், தெற்கு மண்டல உதவி ஆணையாளர் சுந்தாராஜன், உதவி செயற்பொறியாளர் சுந்தாராஜ், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் லட்சுமணன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.