கோவை: கோவை பாரதியார் பல்கலையின் கீழ், காமராசர் அறக்கட்டளை கல்வி உதவித்தொகை பெற, 60 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மாநில அரசால் பாரதியார் பல்கலையில், காமராசர் அறக்கட்டளை 25 லட்சம் ரூபாயில் நிறுவப்பட்டது. இதில், இருந்து பெறப்படும் வட்டி பணம் மூலம் கல்வியில் சிறப்பாக செயல்படும், அரசு, அரசு, உதவி பெறும், பல்கலை உறுப்பு, பல்கலை என நான்கு பிரிவுகளில், 15 மாணவர்கள் வீதம் தேர்வு செய்து, ஆண்டுதோறும் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
அதன் படி, 2020-21ம் ஆண்டுக்கான தகுதியான, 60 மாணவர்கள் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு, தலா, 2,770 ரூபாய் வழங்க, பல்கலை தரப்பில் அனுமதி பெறப்பட்டுள்ளது.
கொரோனா காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதால், கல்வி உதவித்தொகை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், விரைவில் வழங்கப்படவுள்ளதாகவும், பல்கலை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.