திருப்பூர்: திருப்பூரில் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சிலிண்டரை பாடை கட்டி எடுத்து வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வீட்டு உபயோகத்துக்கான சமையல் காஸ் சிலிண்டர் விலையை ஒன்றிய அரசு ரூ.25 உயர்த்தியுள்ளது. இதன்மூலம், கடந்த 8 மாதங்களில் ரூ.165 அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்துக்கான வீட்டு உபயோக சிலிண்டரின் விலை ரூ.50 உயர்த்தப்பட்டு, ரூ.610-ல் இருந்து ரூ.660 ஆக நிர்ணயிக்கப்பட்டது.
பின்னர், இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இருந்து எரிவாயு சிலிண்டர் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. பிப்ரவரி 4-ம் தேதி ரூ.25-ம், பிப்.15-ம் தேதி ரூ.50-ம் உயர்த்தப்பட்டன. பிப்.25-ம் தேதி மறுபடியும் ரூ.25 உயர்த்தப்பட்டது. அடுத்து, மார்ச் 1-ம் தேதி ரூ.25 உயர்த்தப்பட்டது.
இந்நிலையில், தற்போது ரூ.25 ஒன்றிய அரசு அதிகரித்துள்ளது. இதனால் கடந்த மாதம் ரூ.850.50-க்கு விற்பனையான சமையல் காஸ் சிலிண்டர், ரூ.25 அதிகரித்து ரூ.875.50 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த 8 மாதங்களில் மட்டும் சிலிண்டர்விலை ரூ.165 அதிகரித்துள்ளது.
கொரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள ஏழை மக்களை வாட்டிவதைக்கும் விதமாக ஒன்றிய அரசு சிலிண்டர் விலையை உயர்த்தி வருகிறது. இதனால் சிலிண்டர் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, திருப்பூர் மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் திருப்பூர் வெள்ளியங்காடு பகுதியில் சிலிண்டர் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து சிலிண்டரை பாடைகட்டி எடுத்துவந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சிலிண்டர் விலையை உடனடியாக ஒன்றிய அரசு குறைக்க வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.