பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் தொடர் ரேஷன் அரிசி திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த இருவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளிலிருந்து, அண்டை மாநிலமான கேரளாவிற்கு, தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் இலவச ரேஷன் அரிசி உள்ளிட்ட பொருட்களை, சிலர் சட்டவிரோதமாகக் கடத்தி விற்பனை செய்வது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் பொள்ளாச்சி அருகே உள்ள திப்பம்பட்டி கிராமத்தில் ஒரு குடோனில், பதுக்கி வைத்திருந்த சுமார் 17-டன் ரேஷன் அரிசியை வருவாய்த் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மேலும் இது தொடர்பாகப் பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்த 23-வயதான முகமது தவ்பிக் மற்றும் ஆனைமலை பகுதியைச் சேர்ந்த 22-வயதான ஞானபிரகாஷ் ஆகிய இருவரை காவல்துறை கைது செய்து கோவை மத்தியச் சிறையில் அடைத்துள்ளனர்.
தொடர் ரேஷன் அரிசி திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வரும் இவர்கள் மீது குண்டர் சட்டத்தில் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று, காவல்துறை கோவை மாவட்ட ஆட்சியருக்குப் பரிந்துரை செய்தனர்.
இதனை விசாரித்த கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், ரேஷன் அரிசி திருட்டில் ஈடுபட்டு வந்த தவ்பிக் மற்றும் ஞானபிரகாஷ் ஆகிய இருவர் மீது இன்று குண்டர் சட்டத்தில் வழக்கு பதிவு செய்ய உத்தரவு பிறப்பித்தார். இந்நிலையில், கோவை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இருவர் மீதும் இன்று பொள்ளாச்சி கிழக்கு காவல்துறை குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.