கோவையில்‌ தூய்மைப்பணியாளா்கள்‌ மேற்கொள்ளும்‌ பணிகள்‌, குடிநீர்‌ குழாய்‌ இணைப்பு பணிகள்‌ மற்றும்‌ மழைநீர்‌ வடிகால்‌ கால்வாய்‌ அமைக்கும்‌ பணிகள்‌ குறித்து மாநகராட்சி ஆணையாளர்‌ ஆய்வு.!!

கோவை: கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலப்‌ பகுதிகளில்‌ தூய்மைப் பணியாளார்கள்‌ மேற்கொள்ளும்‌ பணிகள்‌, குடிநீர்‌ குழாய்‌ இணைப்பு பணிகள்‌ மற்றும்‌ மழைநீர்‌ வடிகால்‌ கால்வாய்‌ அமைக்கும்‌ பணிகள்‌ குறித்து மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா இ.ஆ.ப.,‌ இன்று (18.08.2021) நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


கோவை: கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலப்‌ பகுதிகளில்‌ தூய்மைப் பணியாளார்கள்‌ மேற்கொள்ளும்‌ பணிகள்‌, குடிநீர்‌ குழாய்‌ இணைப்பு பணிகள்‌ மற்றும்‌ மழைநீர்‌ வடிகால்‌ கால்வாய்‌ அமைக்கும்‌ பணிகள்‌ குறித்து மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா இ.ஆ.ப.,‌ இன்று (18.08.2021) நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



கோயம்புத்தூர்‌ மாநகராட்சி கிழக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.57,58-க்குட்பட்ட உப்பிலி பாளையம்‌ சுகாதார ஆய்வாளர்‌ அலுவலகத்தில்‌ தூய்மைப்‌ பணியாளர்களின்‌ பணிகள்‌ குறித்து ஆய்வு மேற்கொண்ட ஆணையாளர்‌‌, தூய்மைப்பணியாளர்களின்‌ வருகைப்‌ பதிவேடுகளை ஆய்வு செய்த பின்னர்‌, தூய்மைப்பணியாளார்கள்‌ நேரம்‌ தவறாமல்‌ பணிக்கு வருகை தர வேண்டும்‌.

வீடுதோறும்‌ குப்பைகளைச் சேகரிக்கும்‌ போது மக்கும்‌ குப்பை, மக்காத குப்பை என தரம்‌ பிரித்து சேகரிக்க வேண்டும்‌. மழைநீர் வடிகால்‌ கால்வாய்களில்‌ அடைக்கப்பட்டுள்ள குப்பைகளை அகற்றி நீர் தேங்காமல்‌ செல்லும்‌ வகையில்‌ கால்வாயினை சுத்தப்படுத்திட வேண்டும்‌.

கொசுவினால்‌ ஏற்படும்‌ நோய்களைத்‌ தவிர்க்கப் பொதுமக்களிடையே போதிய விழிப்புணர்வினை ஏற்படுத்திட வேண்டும்‌. தூய்மையான மாநகராட்சியாகத் திகழ தங்களுடைய பணிகளைச் சிறப்பாகச் செய்திட வேண்டும்‌. அனைவரும்‌ முகக்கவசம்‌ அணிந்து பணியாற்ற வேண்டும்‌. கிருமிநாசினி கொண்டு கைகளை அடிக்கடி சுத்தப்படுத்திட வேண்டும்‌. தடுப்பூசி போடாதவர்கள்‌ போட்டுக்கொள்ள வேண்டும்‌ என தெரிவித்தார்கள்‌.



தொடர்ந்து, கிழக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.61, ஒண்டிப்புதூர்‌, திருவள்ளுவர்‌ நகரில்‌ குடிநீர்‌ குழாய்கள்‌ இணைக்கும்‌ பணிகள்‌ நடைபெற்றுவருவதை நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட ஆணையாளர்‌‌, தொடர்ந்து, 59-வது வார்டுக்குட்பட்ட எஸ்‌.ஐ.ஹெச்‌.எஸ்‌.காலனி ஏரோட்ரூம்‌ ரோடு, கங்கா நகர்‌ பகுதியில்‌ மழைநீர் வடிகால்‌ கால்வாய்‌ கட்டப்பட்டுவரும்‌ பணிகளை பார்வையிட்ட ஆணையாளர்‌ கால்வாயில்‌ நீர் தேங்காமல்‌ சீராக செல்லும்‌ வகையில்‌ கால்வாய்‌ அமைக்கப்பட வேண்டும்‌ என மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா இ.ஆ.ப., தெரிவித்தார்.



இந்த ஆய்வின்போது செயற்பொறியாளர்‌ (கிழக்கு) ஞானவேல்‌, கிழக்கு மண்டல உதவி ஆணையாளர்‌ ரங்கராஜன்‌, மண்டல சுகாதார அலுவலர்‌ முருகா, சுகாதார ஆய்வாளர்‌ ராஜேந்திரன்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ ஆகியோர்‌ உடனிருந்தனர்‌.

Newsletter

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...