தமிழ்நாட்டில் முதல்முறையாக சுற்றுலா ஆர்வலர்களை கொண்ட வளர்ச்சிக்குழு.!! கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட சுற்றுலாத் துறை அதிகாரி தொடங்கி வைத்தார்

திருப்பூர்: தமிழ்நாட்டில் முதல்முறையாகச் சுற்றுலா ஆர்வலர்களைக் கொண்டு திருப்பூர் மாவட்ட சுற்றுலா வளர்ச்சிக் குழு கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட சுற்றுலாத் துறை அதிகாரி அரவிந்த குமார் தொடங்கி வைத்தார்.



திருப்பூர்: தமிழ்நாட்டில் முதல்முறையாகச் சுற்றுலா ஆர்வலர்களைக் கொண்டு திருப்பூர் மாவட்ட சுற்றுலா வளர்ச்சிக் குழு கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட சுற்றுலாத் துறை அதிகாரி அரவிந்த குமார் தொடங்கி வைத்தார்.

திருப்பூர் மாவட்டத்தில் திருமூர்த்தி மலை அமணலிங்கேஸ்வரர் திருக்கோயில், பஞ்சலிங்க அருவி, திருமூர்த்திமலை அணை, நீச்சல் குளம், அமராவதி அணை, அமராவதி முதலைப்பண்ணை, உப்பாறு அணை, சின்னாறு சுற்றுலாத்தலம், சிவன்மலை, அவிநாசிலிங்கேஸ்வரர் திருக்கோவில், திருமுருகநாத சுவாமி திருக்கோவில், ஊத்துக்குளி முருகன் கோவில், சுக்ரீஸ்வரர் கோவில், அழகு திருமலைராயப்பெருமாள் கோவில், கொண்டத்துக்காளியம்மன் கோவில் போன்ற பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளன.

இதில் பெரும்பாலான சுற்றுலாத்தலங்கள் அறியப்படாத சுற்றுலாத் தலங்களாக இருக்கின்றன. எனது திருப்பூர் மாவட்டத்தில் சுற்றுலாத்தலங்களில் பெருமையை மற்ற மாவட்டங்கள் மாநில மக்கள் அறியும் வண்ணம் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எடுத்து சமூகவலைத்தளங்களில் பிரபல படுத்தவும், திருப்பூர் மாவட்ட சுற்றுலாத் தலங்களின் வளர்ச்சியில் மாவட்ட சுற்றுலாத் துறையுடன் இணைந்து பல்வேறு சேவை புரியவும் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா ஆர்வலர்களுக்குக் கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட சுற்றுலாத் துறை அதிகாரி T.அரவிந்த குமார் தனது சமூக வலைத்தளமான முகநூல் கணக்கில் அழைப்பு விடுத்திருந்தார்.



அவரின் அழைப்பை ஏற்றுத் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா ஆர்வலர்கள் 500-க்கும் மேற்பட்டோர் ஒரேநாளில் இணைந்தனர். தமிழ்நாட்டில் ஒரே நாளில் இவ்வளவு சுற்றுலா ஆர்வலர்கள் இணைந்து இருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே சுற்றுலா ஆர்வலர்களைக் கொண்டு முதல் கூட்டம் கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றி திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் உள்ள மீனாட்சி மண்டபத்தில் நடைபெற்றது. கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு இந்த ஆலோசனைக் கூட்டத்தில் குறிப்பிட்ட சுற்றுலா ஆர்வலர்களுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு சுற்றுலா ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். நாகராஜன் S.M Travels, சத்யம் பாபு, உடுமலை அரசு கலைக்கல்லூரி சுற்றுலாத்துறையின் தலைவர் விஜய் ஆனந்த், உடுமலை வரலாற்று ஆய்வு நடுவம் நிர்வாகிகள், நல்லாசிரியர் விஜயலட்சுமி, கண்ணபிரான், நாகராஜன், Udumalai App, Udumalai Info சமூக வலைத்தள கணக்கு நிர்வாகிகள் போன்ற முக்கிய சுற்றுலா ஆர்வலர்கள் சுற்றுலா வளர்ச்சிக்கு தங்கள் கருத்துக்களைக் கூறினர்.

திருப்பூர் மாவட்டத்தில் எஸ்.எம்.டிராவல்ஸ் நிறுவனத்தின் தலைவர் நாகராஜ் திருப்பூர் மாவட்ட சுற்றுலா பற்றியும் சுற்றுலா செல்வதினால் ஏற்படக்கூடிய மனமகிழ்ச்சி பற்றியும் சுற்றுலா ஆர்வலர்கள் திருப்பூர் மாவட்ட சுற்றுலாத் துறையுடன் இணைந்து பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

உடுமலை அரசு கலைக்கல்லூரி சுற்றுலாத் துறைத் தலைவர் விஜய் ஆனந்த் பேசும்போது திருப்பூர் மாவட்ட சுற்றுலாத் துறையின் வளர்ச்சிக்கு எங்கள் கல்லூரி முக்கிய பங்காற்றும் என்றார். உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தின் சார்பாக தொல்லியல் சுற்றுலா சார்ந்த பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டன.

இதுகுறித்து சத்யம் பிரிண்டர்ஸ் பாபு கூறியதாவது:-

சுற்றுலாத் தலங்களைத் தூய்மைப்படுத்த எங்கள் ரோட்டரி தேஜாஸ் கிளப் மூலமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அறிவியல் சுற்றுலா பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கும்படி ஆசிரியர் கண்ணபிரான் அவர்கள் கோரிக்கை விடுத்தார்.

சூழல் சுற்றுலாவை மீண்டும் செயல்படுத்தக் கோரி உடுமலை சுற்றுச்சூழல் குழு நிர்வாகி நாகராஜன் அவர்கள் கோரிக்கை விடுத்தார்.

நிகழ்ச்சிக்குத் தலைமை ஆற்றிய மாவட்ட சுற்றுலாத் துறை அதிகாரி அரவிந்த குமார் பேசியதாவது:-

தமிழ்நாட்டில் சுற்றுலா வளர்ச்சியில் திருப்பூர் மாவட்டத்தை முன்னிலைப்படுத்தத் திருப்பூர் மாவட்ட சுற்றுலாத் துறையின் சார்பில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சிவன் மலைக் கோவிலுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க கருத்துரு தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

திருமூர்த்திமலை அணைப்பகுதியில் ஒரு அணை பூங்கா வைப்பதற்கும் அமராவதி அணைப் பகுதியில் பூங்காவை மேம்படுத்துவதற்கும் பல்வேறு கருத்துக்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

உடுமலை சுற்றி பல்வேறு சுற்றுலாத் தலங்கள் இருப்பதாகவும் உடுமலை சுற்றுலாத்தலங்களில் மையப் பகுதியாக உள்ளதாலும் உடுமலை நகரை சீர்மிகு நகரமாக மாற்ற 'ஸ்மார்ட் உடுமலை திட்டம்' நகராட்சி துறையுடன் இணைந்து செயல்படுத்தச் சுற்றுலாத் துறை திட்டமிட்டுள்ளது.

மேலும் திருப்பூர் மாவட்டத்தில் அறியப்படாத பல்வேறு சுற்றுலாத் தளங்கள் உள்ளன. எனவே அந்த அறியப்படாத சுற்றுலாத் தலங்களை சமூக வலைத்தளங்கள் மூலம் பிரபலப்படுத்தவும், திருப்பூர் மாவட்ட சுற்றுலா வளர்ச்சிக்குத் தேவையான ஆலோசனைகளை அளிக்கவும் சுற்றுலா ஆர்வலர்களைக் கேட்டுக்கொண்டார்.

மேலும் திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு தொல்லியல் புராதான சின்னங்கள் காணப்படுகின்றன. அவற்றைப் பிரபலப் படுத்தவும் சுற்றுலாத்துறை திட்டமிட்டுள்ளதாகக் கூறினார். எனவே திருப்பூர் மாவட்ட சுற்றுலாத் துறை வளர்ச்சியில் சுற்றுலா ஆர்வலர்கள் அதிக அளவில் பங்களிப்பு செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்.

மேலும் சுற்றுலா ஆர்வலர்களைக் கொண்டு திருப்பூர் மாவட்ட சுற்றுலா வளர்ச்சி குழு உருவாக்கப்பட்டது. திருப்பூர் மாவட்டத்திற்கு என சுற்றுலாத்துறையின் சார்பில் தனிச் சின்னம் கொண்டுவர முதல் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

மேலும் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா ஆர்வலர்களுக்கும் சுற்றுலா தொழில் முனிவர்களுக்கும் தடுப்பூசி சிறப்பு முகாம் விரைவில் ஏற்பாடு செய்யப்படும் என்றும் கூறினார்.

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பில் சுற்றுலா ஆர்வலர்கள் ஜவகர், சண்முகம், பிரசாந்த், பொன் ராஜ் மற்றும் ராஜேஷ் ஆகியோர் பங்காற்றினர்.

Newsletter

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...