கோவை தடாகம் பகுதியில் செங்கல்லை கொண்டு சென்ற இரண்டு லாரிகள் பறிமுதல் - உரிமையாளர்கள் மீது வழக்குபதிவு!

கோவை: கோவை தடாகம் பகுதியில் செங்கல்லை கொண்டு சென்ற இரண்டு லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டு உரிமையாளர்கள் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.


கோவை: கோவை தடாகம் பகுதியில் செங்கல்லை கொண்டு சென்ற இரண்டு லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டு உரிமையாளர்கள் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை தடாகம் பகுதியில் செயல்பட்டு வரும் செங்கல் சூளைகளால் கனிம வளங்கள் அழிக்கப்படுவதை தொடர்ந்து, அனுமதியின்றி பல சூளைகள் இயங்குவதாகவும் தொடரப்பட்ட வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் அப்பகுதியில் செங்கல் சூளைகள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று இரவு தடாகம் காவல்துறையினர் கணுவாய் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது, அவ்வழியே செங்கற்களை ஏற்றி வந்த இரு லாரிகளை பறிமுதல் செய்து, போலீசார் தடாகம் காவல் நிலையம் கொண்டு சென்றனர். இது குறித்து கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் அளிக்கப்பட்டது.



இந்த நிலையில், லாரியை ஓட்டி வந்த இரு ஓட்டுநர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் லாரியின் உரிமையாளர்கள் சத்தியமூர்த்தி மற்றும் கனகராஜ் என்பது தெரிய வந்தது. இதனையடுத்து, 2 உரிமையாளர்கள், 2 ஓட்டுநர்கள்(சுந்தரபாண்டி, ரங்கராஜ்) மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

செங்கல் சூளைகள் இயங்க தடை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில் செங்கல் ஏற்றி வந்த லாரிகளால் செங்கல் சூலைகள் மீண்டும் இயக்கப்படுகிறதா என்ற கேள்வி சமூக ஆர்வலர்களிடையே எழுந்துள்ளது.

Newsletter

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...