கோவையில் அ.தி.மு.க ஆட்சியில் நிறைவேற்றாத அடிப்படை வசதிகளை மூன்றே நாளில் செய்து கொடுத்த தி.மு.க பொறுப்புக் குழு உறுப்பினருக்கு பொதுமக்கள் பாராட்டு.!!

கோவை: கோவை கடந்த அ.தி.மு.க ஆட்சியில், நிறைவேற்றிக் கொடுக்காத அடிப்படை வசதிகளை, மூன்றே நாட்களில் முடித்து கொடுத்த, தி.மு.க பொறுப்புக் குழு உறுப்பினருக்கு, பொதுமக்கள் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.



கோவை: கோவை கடந்த அ.தி.மு.க ஆட்சியில், நிறைவேற்றிக் கொடுக்காத அடிப்படை வசதிகளை, மூன்றே நாட்களில் முடித்து கொடுத்த, தி.மு.க பொறுப்புக் குழு உறுப்பினருக்கு, பொதுமக்கள் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

கோவை மாநகர் மேற்கு மாவட்ட கணபதி பகுதி 46-வது வட்டம் கணபதி பகுதி, தி.மு.க பொறுப்புக் குழு உறுப்பினராக இருப்பவர் கணபதி சம்பத்குமார். சமீபத்தில், இவரை சந்தித்த பெரியார் நகர் பகுதி மக்கள், அவர்கள் அன்றாடம் சந்தித்து வரும் இன்னல்களை பட்டியலிட்டு, அடிப்படைத் தேவைகளைச் பூர்த்தி செய்து தரும்படி கோரிக்கை மனுக்களை அளித்தனர். 

மேலும், கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்ற அதிமுக ஆட்சியில், பலமுறை மனு அளித்தும் அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்படவில்லை என வருத்தம் தெரிவித்த மக்கள், உடனடியாக தீர்வு கிடைக்க உதவும்படி கேட்டுக்கொண்டனர். 

அவர்கள் மனுவை பெற்றுக்கொண்ட சம்பத்குமார், போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த மின் கம்பம், உப்புத் தண்ணீர் குழாய் வசதி, சாக்கடை அடைப்பு, போர்வெல் பம்ப் செட் தேவை என கடந்த ஆட்சியில் கிடப்பில் போடப்பட்டிருந்த பெரியார் நகர் மக்களின் அடிப்படைத் தேவைகளை மாநகராட்சி உதவியுடன் மூன்றே நாளில் சரி செய்து கொடுத்துள்ளார் என்கின்றனர் அப்பகுதி மக்கள். 

நீண்ட நாளாக புறக்கணிக்கப்பட்ட தேவைகளை, மூன்றே நாட்களில் செய்து கொடுத்த திமுக பொறுப்புக் குழு உறுப்பினர், சம்பத் குமாருக்கு, பெரியார் நகர் மக்கள் ஒன்றாகச் சேர்ந்துபொன்னாடை அணிவித்து அவர்களது நன்றியை தெரிவித்தனர்.

இது குறித்து பேசிய சம்பத் குமார், தி.மு.க ஆட்சியில் மக்களின் கோரிக்கைகள் உடனுக்குடன் நிறைவேற்றிக் கொடுக்கப்படும் என்றும் தன்னை எப்போது வேண்டுமானாலும் சந்தித்து புகார் மனுக்களை அளிக்கலாம், என்று உறுதிபட தெரிவித்தார். 

Newsletter

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...