முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வேண்டப்பட்ட கோவை மாநகராட்சி ஒப்பந்த தாரர்களுடைய கணக்குகள் தணிக்கை.!!

கோவை: முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வேண்டப்பட்ட கோவை மாநகராட்சி ஒப்பந்த தாரர்களுடைய கணக்குகள் தணிக்கை செய்யப்பட்டு வருகிறது.



கோவை: முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வேண்டப்பட்ட கோவை மாநகராட்சி ஒப்பந்த தாரர்களுடைய கணக்குகள் தணிக்கை செய்யப்பட்டு வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு முன்னாள் நகராட்சி நிர்வாக துறை அமைச்சராக இருந்த எஸ்.பி. வேலுமணி வீடு உட்பட 60-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்பு காவல்துறை சோதனையில் ஈடுபட்டு பல்வேறு ஆவணங்களை எடுத்துச்சென்றனர்.

தொடர்ந்து எஸ்.பி. வேலுமணி உள்பட 17-பேர் மீது 3-பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் உடைய கணக்குகள் தணிக்கை செய்யப்பட்டு வருகிறது.

இதன்படி திங்கள் செவ்வாய் இரண்டு நாட்களும் முன்னால் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வேண்டப்பட்ட ஒப்பந்ததாரர்களுடைய உத்தரவின் பேரில் வழங்கப்பட்ட ஒப்பந்ததாரர்கள் உடைய கணக்குகள் தணிக்கை செய்யும் பணி நடைபெற்று வருவதாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் வட்டாரங்கள் தெரிவித்தன.

வேலுமணி கோவை மாநகராட்சியில் பணிகள் ஒப்பந்த விவகாரத்தில் முறைகேடுகள் நடைபெற்றதாக எழுந்த புகாரின் பேரில், முன்னாள் அமைச்சருக்கு நெருக்கமான ஒப்பந்ததாரர்களின் கணக்குகளை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் திங்கள்கிழமை தணிக்கை மேற்கொண்டதாகத் தெரியவருகிறது.

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமான நபர்களுக்குக் கோவை மாநகராட்சியில் முறைகேடாக ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டதாகவும், இதில் முன்னாள் அமைச்சருக்கு 8 முதல் 12 சதவீதம் கமிஷன் வழங்கப்பட்டதாகவும் புகாா் எழுந்தது.

இது குறித்து, திமுக சார்பில் மாநகராட்சி ஆணையர் மற்றும் லஞ்ச ஒழிப்பு காவல்துறைக்கு புகார் மனுக்களும் அனுப்பப்பட்டன. இதற்கிடையே, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான 50க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புப் போலீஸாா் கடந்த வாரம் சோதனை மேற்கொண்டனர்.

இந்த நடவடிக்கையின் தொடர்ச்சியாகக் கோவை மாநகராட்சியில் முன்னாள் அமைச்சரின் உறவினர்கள் மற்றும் நெருக்கமானவர்களுக்குக் கடந்த 10 ஆண்டுகளாக வழங்கப்பட்ட ஒப்பந்தப் பணிகள் குறித்த கணக்குகளை லஞ்ச ஒழிப்புப் போலீஸாா் திங்கள்கிழமை தணிக்கை மேற்கொண்டு அதில் முறைகேடுகள் நடந்துள்ளதா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டதாகத் தகவல்கள் பரவின.

ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ள பணிகள், ஒப்பந்தத் தொகையில் முடிக்கப்பட்டுள்ளதா என்ற விவரங்களும் சேகரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

Newsletter

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...