கொசுவினால்‌ ஏற்படும்‌ நோய்களை தவிர்க்க பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்திட வேண்டும்‌.! கோவை நகர் புற ஆரம்பச் சுகாதார நிலையத்தில்‌ அளிக்கப்படும்‌ சிகிச்சை முறைகள்‌ குறித்து ஆய்வு.!

கோவை: கோவை மாநகராட்சி மேற்கு மண்டல பகுதிகளில்‌ கொரோனா பணிகளை மேற்கொள்ளும்‌ முன் களப்பணியாளர்களின்‌ பணிகள்‌ குறித்து மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா இ.ஆ,.ப., ஆய்வு செய்தார்.


கோவை: கோவை மாநகராட்சி மேற்கு மண்டல பகுதிகளில்‌ கொரோனா பணிகளை மேற்கொள்ளும்‌ முன் களப்பணியாளர்களின்‌ பணிகள்‌ குறித்து மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா இ.ஆ,.ப., ஆய்வு செய்தார்.

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல பகுதிகளில்‌ கொரோனா தடுப்புப்‌ பணிகளில்‌ ஈடுபடும்‌ முன்களப்பணியாளார்கள்‌ மேற்கொள்ளும்‌ பணிகள்‌ குறித்தும்‌, நகாப்புற ஆரம்பச் சுகாதார நிலையங்களில்‌ அளிக்கப்படும்‌ சிகிச்சை முறைகள்‌ குறித்தும்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா இ.ஆ.ப.,‌ இன்று 17.08.2021 நேரில்‌ ஆய்வு மேற்கொண்டார்கள்‌.



கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம்‌ வார்டு எண்‌.14 வெங்கிட்டாபுரம்‌ சுகாதார ஆய்வாளர்‌ அலுவலகத்தில்‌ முன் களப்பணியாளர்கள்‌ மேற்கொண்ட பணிகள்‌ குறித்து ஆய்வு மேற்கொண்ட ஆணையாளர்‌, முன்களப்பணியாளா்கள்‌ வீடு வீடாகச்‌ சென்று சளி, காய்ச்சல்‌, இருமல்‌ போன்ற பரிசோதனைகளைக் கண்டறிந்து, பரிசோதனையின்‌ விபரங்களை கோவிட்‌-19 கள ஆய்வுப்‌ பதிவேடுகளில்‌ பதிவு செய்ததை ஆய்வு மேற்கொண்ட ஆணையாளர்‌, சளி, காய்ச்சல்‌, இருமல்‌ உள்ளவர்களைப் பரிசோதனை செய்யும்போது கொரோனா தொற்று ஏற்பட்டது கண்டறியப்பட்டால்‌ அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உடனடியாக சிகிச்சை அளித்து காப்பாற்றப்படுகிறது.

இத்தகைய பணிகளை நீங்கள்‌ இன்னும்‌ மிகச்சிறப்பாகச் செய்திட வேண்டும்‌. சளி, காய்ச்சல்‌, இருமல்‌ உள்ளவர்களை கண்டறியப்படுதல்‌ வேண்டும்‌. களப்பணி மேற்கொள்ளும்போது முகக்கவசம்‌ அணிந்தும்‌, கிருமிநாசினி கொண்டு கைகளை அடிக்கடி சுத்தப்படுத்திட வேண்டும்‌, மேலும்‌, கொசுவினால்‌ ஏற்படும்‌ நோய்களைத் தடுப்பதற்காகப் பொதுமக்களிடம்‌ வீடுகளில்‌ உள்ள உபயோகமற்ற பொருட்கள்‌, பயனற்ற பிளாஸ்டிக்‌ பொருட்களை அப்புறப்படுத்த வேண்டும்‌.

தண்ணீர் தொட்டிகளைக் கொசுக்கள்‌ புகாவண்ணம்‌ மூடி வைக்க வேண்டும்‌ என்பதைப் பொதுமக்களிடம்‌ முன் களப்பணியாளர்கள்‌ விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்‌ எனத் தெரிவித்தார்கள்‌.



தொடர்ந்து, வார்டு எண்‌.22, இராமலிங்கம்‌ காலனி, பாரதி பூங்கா சாலை- ॥ல்‌ உள்ள மீனாட்சி மகப்பேறு மைய நகாப்புற ஆரம்பச் சுகாதார நிலையத்தில்‌ ஆய்வு மேற்கொண்ட ஆணையாளர்‌‌ காப்பிணி தாய்மார்களுக்குப் பிரசவத்திற்கு முன்பு, பின்பு அளிக்கப்படும்‌ சிகிச்சை முறைகள்‌, தாய்‌சேய்களுக்கு போடப்படும்‌ தடுப்பூசிகள்‌, தாய்‌ சேய்‌ நல பாதுகாப்பு அட்டையில்‌ பதிவு செய்து, பராமரிப்பது குறித்த பதிவேடுகளையும்‌, புற நோயாளிகளின்‌ பதிவேடு மற்றும்‌ டாக்டர்‌.முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு திட்டத்தில்‌ காப்பிணிகளுக்கு உதவித்தொகை வழங்கப்படுவது குறித்துக் கேட்டறிந்த பின்னர் அங்குள்ள பராமரிப்பு பதிவேடுகளையும்‌, கணினி பதிவேற்றம்‌ செய்யும்‌ மையத்தில்‌ அதன்‌ செயல்பாடுகளைக்‌ குறித்து ஆய்வு செய்த பின்னா்‌, அந்த மையத்தில்‌ ரூ.37.5 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ கட்டப்பட்டுவரும்‌ கூடுதல்‌ கட்டிடத்தின்‌ பணிகள்‌ நடைபெற்றுவருவதை மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ இ.ஆ.ப. நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்‌.



இந்த ஆய்வின்போது, உதவி நகர்நல அலுவலர் மரு.வசந்த்‌ திவாகர்‌, மேற்கு மண்டல உதவி ஆணையாளர்‌ சிவசுப்பிரமணியன்‌, செயற்பொறியாளர்‌ (மேற்கு மண்டலம்‌) பார்வதி, உதவி பொறியாளர்‌ கமலக்கண்ணன்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ ஆகியோர்‌ உடன்‌ இருந்தனர்‌.

Newsletter

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...