விவசாய பட்ஜெட் மூலம் உணவு உற்பத்தி, வேளாண் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும்-தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்!!

கோவை: தமிழக அரசின் விவசாய பட்ஜெட் மூலம் உணவு உற்பத்தி, வேளாண் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும் என விவசாயிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.


கோவை: தமிழக அரசின் விவசாய பட்ஜெட் மூலம் உணவு உற்பத்தி, வேளாண் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும் என விவசாயிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாவட்ட தலைவர் சு.பழனிசாமி கூறியதாவது:-

தமிழகத்தில் விவசாயிகளுக்குத் தனி பட்ஜெட் தாக்கல் செயல்பட்டுள்ளது. இது மிகவும் வரவேற்கத்தக்கது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் முருங்கை ஏற்றுமதி மையம் அறிவிப்பு, 65 சதவீதத்திலிருந்து 75 சதவீதமாகச் சாகுபடி பரப்பளவு உயர்த்துதல், விவசாயத்தில் புதிய முறையைக் கண்டுபிடிப்பவர்களுக்குப் பரிசு, இலவச மின்சார திட்டத்திற்கு ரூ. 4505 கோடி ஒதுக்கீடு, பணை மரம் வளர்ப்பு ஊக்குவிப்பு போன்ற பல்வேறு திட்டங்கள் விவசாயிகளுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.

இந்த திட்டங்களின் மூலம் உணவு உற்பத்தி, வேளாண் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும். அதே போல் கோவை விவசாயிகளின் 60 ஆண்டு கோரிக்கையான பாண்டியாறு புன்னம்புழா திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். இதனால் கோவை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் விவசாயிகள் பயன்பெறுவார்கள்.

ஆனைமலை நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். இதன் மூலம் 4 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும். தமிழகத்தில் நீர் ஆதாரம் பெருகும். வனவிலங்குகளால் உயிர்ச் சேதம், பயிர் சேதம் ஏற்படும் போது உடனடியாக இழப்பீடு தர வேண்டும்.

கர்நாடகம், ஆந்திரா மாநிலங்களில் உடனடியாக இழப்பீடு தருவது போல் தமிழகத்தில் தர வேண்டும். கோவையைத் தலைமையிடமாகக் கொண்டு தமிழகத்தில் தென்னை நல வாரியம் அமைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...