கோவையில் 80-வயது மூதாட்டியைக் கொலை செய்து நகையைத் திருடிச் சென்ற கொள்ளையனுக்கு ஆயுள் தண்டனை- கோவை நீதிமன்றம் தீர்ப்பு.!!

கோவை: 80-வயது மூதாட்டியைக் கொலை செய்து நகையைத் திருடிச் சென்ற கொள்ளையனுக்கு ஆயுள் தண்டனை வழங்கி கோவை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.


கோவை: 80-வயது மூதாட்டியைக் கொலை செய்து நகையைத் திருடிச் சென்ற கொள்ளையனுக்கு ஆயுள் தண்டனை வழங்கி கோவை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

கோவையில் இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒன்டிபுதூர் பகுதியில் 80-வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் தனிமையில் வசித்து வந்தார்.

அவர் வீட்டு அருகே வசித்து வந்த நபர் மூதாட்டி தனிமையில் இருக்கும்பொழுது மூதாட்டியைக் கொலை செய்துவிட்டு அவர் அணிந்திருந்த 4-பவுன் நகையைத் திருடிச் சென்றார்.

இதுகுறித்து சிங்காநல்லூர் காவல்துறை வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். வழக்கு விசாரணையைக் கோவை மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இதில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிபதி பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளார்.

தீர்ப்பின் விவரம் வருமாறு:-

கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் வசித்து வந்தவர் கரியமால் 80, பிள்ளைகள் திருமணமாகி வெவ்வேறு பகுதியில் வசித்து வந்தனர். இவர் தனியாக வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் அவர் வீட்டுக்கு அருகே வசித்து வந்த பாலகிருஷ்ணன் என்பவர் மூதாட்டி தனிமையில் இருப்பதைப் பயன்படுத்தி சுவர் ஏறிக்குதித்து மூதாட்டியைக் கொலை செய்துவிட்டு கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்கச் சங்கிலியைத் திருடிச் சென்றார்.

இதுகுறித்து சிங்காநல்லூர் காவல்துறை வழக்குப் பதிவு செய்து பாலகிருஷ்ணனைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி நாகராஜன் குற்றம் சாட்டப்பட்ட பாலகிருஷ்ணனுக்கு ஆயுள் தண்டனை வழங்கி பரபரப்பு தீர்ப்பு அளித்தார்.

Newsletter

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...