கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு எதிரொலி.!! கோவை-வாளையாறு சோதனை சாவடியில் அதிகாரிகள் ஆய்வு.!!

கோவை: கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு எதிரொலியால் கோவை வாளையாறு சோதனை சாவடியில் மாவட்ட சுகாதார அலுவலர் அருணா தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் கட்டுப்பாடுகளைக் கடுமையாக்க உத்தரவிட்டுள்ளனர்.



கோவை: கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு எதிரொலியால் கோவை வாளையாறு சோதனை சாவடியில் மாவட்ட சுகாதார அலுவலர் அருணா தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் கட்டுப்பாடுகளைக் கடுமையாக்க உத்தரவிட்டுள்ளனர்.

கேரளா மாநிலத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் அருகே உள்ள கோவை மாவட்டத்திலும் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 200 கடந்து வருவதால் கோவை மாவட்டத்தில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாகக் கோவையில் காலை 10-மணி முதல் மாலை 5-மணிவரை வணிக நிறுவனங்கள் செயல் பட அனுமதிக்கப்பட்டுள்ளது. கேரளா கோவை எல்லையான வாளையாறு உள்ளிட்ட 13- சோதனைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.



இந்நிலையில், கோவை மாவட்ட சுகாதார அலுவலர் அருணா தலைமையிலான அதிகாரிகள் வாளையாறு சோதனை சாவடியில் தீடிரென ஆய்வு மேற்கொண்டனர். கேரளாவிலிருந்து கோவைக்கும் வரும் வாகனத்தை ஆய்வு செய்தனர்.



பின்னர், உரிய ஆவணங்கள் இல்லாமல் வருபோரை கேரளாவிற்குத் திருப்பி அனுப்புகின்றனர். மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா விதிமுறைகளை மீறியதாக ரூ. 5.73 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

நேற்று ஒரே நாளில் கொரோனா விதிமுறைகளை மீறியதாக ரூ.4.7-லட்சம் அபராதம் விதக்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்டத்தில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஆய்வு மேற்கொண்டு கொரோனா விதிமுறைகளை மீறுவோருக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.

Newsletter

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...