கோவை: கோவை வால்பாறை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பெண் மருத்துவரை பணியமர்த்த கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கோவை: கோவை வால்பாறை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பெண் மருத்துவரை பணியமர்த்த கோரடமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள பிளட் டோனர்ஸ் அமைப்பின் சார்பாக வால்பாறை வட்டாட்சியர் ராஜனிடம் அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் கா.ஹரிஹரன், சி.ஏ.சுனில், பிரஜேஸ் மனு ஒன்றை வழங்கியுள்ளனர்.
அந்த மனுவில், வால்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனைக்கு தினந்தோறும் பொதுமக்கள் அதிக அளவில் சிகிச்சைக்காக வந்து செல்வதாகவும், அதிலும் மகப்பேறுக்காக பெண்கள் அதிகமாக வரும் நிலையில், அந்த மருத்துவமனையில் பெண்மருத்துவர் இல்லாததால் பெண்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி மன உளைச்சலுக்கு ஆளாகிவருவதாகவும், இந்நிலை தொடராமல் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனைக்கு தாமதமின்றி பெண் மருத்துவரையும் பணியமர்த்த சம்பந்தப்பட்ட துறைசார்ந்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.