தாய்லாந்து பங்குச்சந்தை தரகர்களுக்கான தகவல் தொழில்நுட்ப இயங்குதளத்தை கட்டமைக்கும் ஒப்பந்தத்தை பெற்ற கோவை கேஜிஐஎஸ்எல் நிறுவனம்!

கோவை: கோவை கேஜிஐஎஸ்எல் நிறுவனம் தாய்லாந்து பங்குச்சந்தை தரகர்களுக்கான தகவல் தொழில்நுட்ப இயங்குதளத்தை கட்டமைக்கும் ஒப்பந்தத்தை பெற்றுள்ளது.



கோவை: உலகளாவிய தகவல் தொழில்நுட்பம் சார்ந்த தயாரிப்புகள், டிஜிட்டல் தொழில்நுட்ப தீர்வுகள் மற்றும் சேவைகளை வழங்குவதில் உலகளவில் முன்னணி வகிக்கும் நிறுவனமான கேஜிஐஎஸ்எல், தென்கிழக்கு ஆசிய நாடுகளை உள்ளடக்கிய பிராந்தியத்தின் மிகப்பெரும் பங்குச் சந்தையாக திகழும் தாய்லாந்து பங்குச் சந்தையின் மிக முக்கியமான, மைல்கல் ஒப்பந்தமொன்றை கடும் போட்டிகளுக்கு மத்தியில் வென்றிருக்கிறது. 

இதையடுத்து, கேஜிஐஎஸ்எல், தனது முதன்மை தயாரிப்பாக முன்னணி வகிக்கும், அதிநவீன அம்சங்கள் மற்றும், மிக உயர்ந்த தொழில்நுட்பத்துடனான டால்ஃபின் டிஜிட்டல் தளத்தை தாய்லாந்தில் செயல்படுத்தும். டால்ஃபின் டிஜிட்டல் இயங்குதளமானது, வர்த்தகங்கள் நடைபெற அவசியமான அலுவலகப் பணிகளை மேற்கொள்ள உதவும் பேக் ஆபீஸ் இயங்குதளமாகும். கேஜிஐஎஸ்எல் இந்த இயங்குதளத்தை தாய்லாந்தின் பங்குச்சந்தை தரகர்களுக்காக வழங்க இருக்கிறது. அடுத்த 16 மாதங்களில் இத்தளத்தின் பணிகள் முடிவடைந்து, தனது செயல்பாடுகளை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கேஜிஐஎஸ்எல் நிறுவனத்தின் டால்ஃபின் டிஜிட்டல் இயங்குதளமானது, முதலீட்டுச் சந்தைகளுக்கான முதன்மை தயாரிப்பாக பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. மேலும், இந்தியாவில் உள்ள முன்னணி நிறுவனம் சார்ந்த பங்குச்சந்தை தரகர்களில் 60 பேருக்கு, அலுவலகம் சார்ந்த பணிகளான க்ளியரிங் மற்றும் செட்டில்மெண்ட் தொடர்பான செயல்பாடுகளை எளிய முறையில் மேற்கொள்ள உதவுகிறது. இதன் தொடர்ச்சியாக, தாய்லாந்தில் உள்ள பங்குச்சந்தை தரகர்களுக்கு ஒரே தளத்தில் அனைத்து தீர்வுகளையும் வழங்கும் இயங்குதளமாக இந்த புதிய தயாரிப்பு உதவும். 

குறிப்பாக, ஈக்விட்டி, பத்திரங்கள், சில்லறை மற்றும் பெரு நிறுவன தரகர்களுக்கான ஆஃப் ஷோர் ட்ரேடிங் போன்றவற்றை ஒரே நேரத்தில் கையாளும் ஆற்றலை வழங்கும். அடுத்த தலைமுறை தொழில்நுட்பத்திலான டால்ஃபின் இயங்குதளம், நாளொன்றுக்கு 5 மில்லியனுக்கு மேற்பட்ட வர்த்தகங்களை கையாண்டு வருவதன் அடிப்படையில் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டுள்ளது. மேலும் வர்த்தகங்கள் எந்நிலையிலும், எந்தளவிலும் வளர்ச்சிக்கண்டாலும், எண்ணிக்கை அதிகரித்தாலும் கூட அவற்றை சுலபமாக கையாளும் ஆற்றலையும் பெற்றிருப்பது இதன் தனித்துவமிக்க அம்சமாகும். 

மேலும், இதர உலகளாவிய இயங்குதளங்களுக்கு மத்தியில், டால்ஃபின் மிக அதிக கவனத்துடன் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. இதற்கு காரணம், இது சந்தையின் தேவைகளுக்கு ஏற்ற பொருத்தமான ஒன்றாகவும், மிக வலுவான செயல்திறன் மற்றும் பெரும் எண்ணிக்கையில் கையாளும் ஆற்றல் மற்றும் தானியங்கி முறையில் இயங்கும் அம்சங்களுடன் இருப்பது குறிப்பிடத்தக்கது.

தாய்லாந்து பங்குச் சந்தையின் தலைவர் டாக்டர் பகோர்ன் பீடதவாட்சாய் கூறுகையில், "தாய்லாந்து பங்குச்சந்தை தரகர்களுக்கு, அவர்களது வர்த்தகங்களுக்கான அலுவலகப் பணிகளில் புரட்சிகரமான புதிய வாய்ப்புகளை உருவாக்கவும், மிகவும் நெறிப்படுத்தப்பட்ட, வலுவான உள்கட்டமைப்பை நிறுவவும் நாங்கள் மேற்கொண்டு வரும் லட்சிய முயற்சிகளில் ஒன்றாக இது அமைந்திருக்கிறது. கேஜிஐஎஸ்எல் மற்றும் தாய்லாந்து பங்குச்சந்தை என எங்கள் இரு நிறுவனங்களுக்குமே சவாலான திட்டமாகவும் இது இருக்கிறது. கேஜிஐஎஸ்எல் நிறுவனத்தின், விரைவாக திட்டத்தை மேற்கொள்ளும் திறன் மற்றும் இதில் பங்கேற்கும் பங்குச்சந்தை தரகர்கள் மதிப்புமிக்க நுண்ணறிவுகளைப் பகிர்ந்து கொள்வதில் காட்டும் தொடர்ச்சியான ஆதரவு ஆகியன இத்திட்டத்தின் வெற்றிக்கு பங்களிக்கும் முக்கிய அம்சங்களாக இருக்கும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம், என்றார்.

தாய்லாந்து பங்குச்சந்தை உடனான கூட்டு செயல்பாடு குறித்து கேஜிஐஎஸ்எல் நிறுவனத்தின் இயக்குனர் தலைமை நிர்வாக அதிகாரி பிரசாத் சண்முகம் கூறுகையில், "இது கேஜிஐஎஸ்எல் நிறுவனத்திற்கு கிடைத்திருக்கும் மாபெரும் வெற்றி. தற்போது வரையிலும், இந்தியச் சந்தையில் டால்ஃபின் சந்தேகத்திற்கு இடமில்லாமல் முதன்மையான தயாரிப்பாக முன்னணி வகித்து வருகிறது. 

இந்நிலையில் எங்களுக்கு கிடைத்திருக்கும் இந்த ஒப்பந்தம், இந்தியாவில் நாங்கள் மிக வலுவாக இருப்பதைப் போலவே, தென்கிழக்கு ஆசிய நாடுகள் மற்றும் ஆசிய பசிஃபிக் பிராந்தியம் முழுவதிலும் வெற்றிப் பயணங்களை உருவாக்கும். 

எனவே, செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல், வணிக நுண்ணறிவு மற்றும் பகுப்பாய்வு ஆகிய நவீன அம்சங்களைச் சேர்க்க இருக்கிறோம். இதன் மூலம், டால்ஃபின் இயங்குதளத்தின் திறன்களை மேம்படுத்துவதில் அதிக முதலீடு செய்வதிலும் ஆர்வமாக உள்ளோம். கேஜிஐஎஸ்எல் நிறுவனத்தின் மீதும், எங்களது டால்ஃபின் இயங்குதளத்தின் மீதும் பெரும் நம்பிக்கை கொண்டிருக்கும் தாய்லாந்து பங்குச் சந்தையின் தலைவர் டாக்டர். பகோர்ன் பீடதவாட்சாய் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன் என்றார்.

தாய்லாந்து பங்குச் சந்தை பற்றி: www.set.or.th 

தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில், அனைத்து முதலீட்டாளர்கள், பத்திர தரகு நிறுவனங்கள் மற்றும் சந்தை வாடிக்கையாளர்களுக்கு தங்குதடையில்லாத வர்த்தக செயல்பாடுகளை மேம்படுத்துவதற்கான முழுமையான சேவைகளை வழங்கும் ஒரு மாபெரும் பங்குச் சந்தையாக முன்னணி வகித்து வருகிறது "முதலீட்டுச் சந்தை அனைவருக்கும் உரியதாக இருக்கவேண்டும்" என்ற தொலைநோக்குப் பார்வையில் தாய் மூலதன சந்தையில் இருந்து அனைத்து தரப்பினரும் பயனடைய உதவும் வகையில் உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் கண்டுபிடிப்புகளை பயன்படுத்தி தாய்லாந்து பங்குச் சந்தை கூட்டு செயல்பாட்டு தளத்தை நோக்கி மாற்றப்பட்டுள்ளது. 

நிதி திரட்டுதல், செல்வம் உருவாக்கம் மற்றும் நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியமான சூழலை உருவாக்கும் நோக்கத்துடன் வெளிப்படையான கட்டமைப்பு மற்றும் அதற்குள்ளாக செயல்படும் இயங்குதளங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. முதலீட்டாளர்களுக்கு முதலீட்டு தரவுகள், தயாரிப்புகள் மற்றும் சேவைகளைப் பெறுவதற்கு வசதியான வாய்ப்புகளை வழங்கும் அதேநேரத்தில், துறையில் ஆபரேட்டர்களுக்கான வணிக வாய்ப்புகளை விரிவுபடுத்துவதிலும் தாய்லாந்து பங்குச் சந்தை தன்னை ஈடுபடுத்தி வருகிறது.

Newsletter

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...