கோவையில் காணாமல் போனவரை கண்டுபிடித்து விசாரணை செய்து வீட்டாரிடம் ஒப்படைத்த போலீசாருக்கு மாவட்ட எஸ்.பி பாராட்டு!

கோவை: கோவையில் காணாமல் போனவரை கண்டுபிடித்து விசாரணை செய்து வீட்டாரிடம் ஒப்படைத்த போலீசாருக்கு மாவட்ட எஸ்.பி செல்வனகரதினம் பாராட்டு தெரிவித்தார்.


கோவை: கோவையில் காணாமல் போனவரை கண்டுபிடித்து விசாரணை செய்து வீட்டாரிடம் ஒப்படைத்த போலீசாருக்கு மாவட்ட எஸ்.பி செல்வனகரதினம் பாராட்டு தெரிவித்தார்.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் அய்யாசாமி, மோகன் குமார், ஆயுதப்படை காவலர் மோகன் குமார், சிறப்பு காவல் படையைச் சேர்ந்த இரண்டு நபர்கள் (PC 8243,PC 9330) ஆகியோர் நேற்று (16.08.2021) இரவு ஓடந்துறை செக்போஸ்டில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது அங்கு கவின் மூர்த்தி(23) என்பவர் நின்று கொண்டிருந்தார்.

அப்போது, அவரை அழைத்து காவல்துறையினர் விசாரிக்கும் போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளார்.

எனவே, காவல் துறையினர் சந்தேகத்தின் பேரில் அவரிடம் இருந்த போன் நம்பரை வாங்கி விசாரிக்கும்போது, அவர் மன அழுத்தத்தின் காரணமாக கடந்த 4 நாட்களாக வீட்டில் இருந்து காணாமல் போனது பற்றி தெரியவந்துள்ளது.

விசாரணையில் கவின் மூர்த்தி கடந்த 4 நாட்களாக காணாமல் போனதன் அடிப்படையில், அவரது பெற்றோர் நேற்று 16-ந் தேதி திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் வழக்கு கொடுத்துள்ளனர் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து, கோவை மாவட்ட காவல்துறையினர் திருப்பூர் தெற்கு காவல் நிலைய தலைமைக் காவலர் திருப்பதி அவர்களை தொடர்பு கொண்டு, கவின் மூர்த்தியை திருப்பூர் தெற்கு காவல் நிலைய தலைமை காவலர் திருப்பதி மற்றும் கவின் மூர்த்தியின் குடும்பத்தினரின் வசம் ஒப்படைத்தனர்.

மேலும், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் இ.கா.ப., அவர்கள் மேற்படி கவின் மூர்த்தியை யாரோ ஒருவர் சாலையில் நின்று கொண்டிருக்கிறார் என விட்டுவிடாமல் அவரை அழைத்து விசாரித்து உரிய நடவடிக்கை விரைந்து எடுத்த மேட்டுப்பாளையம் காவல்துறையினரின் பணியை பாராட்டினார்.

Newsletter

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...