கோவை: கிராம உதவியாளர் காலில் விழுந்த சம்பவத்தில் விசாரணையில் பொய்யான தகவல் அளித்த கிராம நிர்வாக அதிகாரி கலைச்செல்வி, உதவியாளர் முத்துசாமி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

கோவை மாவட்டம் அன்னூர் ஒட்டர் பாளையத்தில் விவசாயி கோபால்சாமி என்பவரின் காலில் கிராம உதவியாளர் முத்துச்சாமி விழுந்த வீடியோ காட்சிகள் முதலில் வெளியானது.
தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் கிராம உதவியாளரைக் காலில் விழ வைத்ததாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவிய நிலையில் இது குறித்து விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் சமீரன்உத்திரவிட்டார்.
மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது.
இதனிடையே தன்னை கிராம நிர்வாக அலுவலர் தாக்கியதாக அன்னூர் காவல் நிலையத்தில் விவசாயி கோபால்சாமி புகார் அளித்து இருந்தார்.
இந்நிலையில் விவசாயி கோபால்சாமி கிராம நிர்வாக அலுவலர் கலைச்செல்வி, கிராம உதவியாளர் முத்துச்சாமி ஆகியோரிடம் மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ் விசாரணை நடத்தினார்.
விசாரணைக்குப் பின்னர் கிராம உதவியாளர் முத்துசாமி, விவசாயி கோபால்சாமியை தாக்கியதற்கான எந்த ஆதாரமும் இல்லை எனவும் அதே வேளையில் விவசாயி கோபால்சாமி காலில் கிராம உதவியாளர் முத்துச்சாமி விழுந்ததற்கான ஆதாரம் இருப்பதாக அறிக்கை மாவட்ட ஆட்சியருக்கு அளிக்கப்பட்டது.
இந்த அறிக்கையின் அடிப்படையில் விவசாயி கோபால்சாமி மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
விவசாயி கோபால்சாமி மீது அரசு ஊழியர்களைப் பணி செய்ய விடாமல் தடுத்ததாக வி.ஏ.ஓ கலைச்செல்வி புகாரில் ஒரு வழக்கும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கிராம உதவியாளர் முத்துச்சாமி கொடுத்த புகாரின் கீழ் ஒரு வழக்கும் என இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் கிராம அலுவலர் அலுவலகத்தில் கிராம உதவியாளர் முத்துச்சாமி, விவசாயி கோபால்சாமி அடித்து கீழே தள்ளும் வீடியோ காட்சிகள் வெளியானது. இதனையடுத்து விவசாயிகள் சங்கத்தினர் முழுமையாக விசாரணை நடத்த வேண்டும் எனவும் வன்கொடுமை சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
இந்நிலையில் மாவட்ட வருவாய் அலுவலர் விசாரணையின் போது உண்மைக்கு மாறான தகவல்களைத் தெரிவித்த ஒட்டர் பாளையம் கிராம நிர்வாக அலுவலர் கலைச்செல்வி, கிராம உதவியாளர் முத்துசாமி ஆகியோர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் சமீரன் உதிரவிட்டார்.
இதனையடுத்து கோவை வடக்கு கோட்டாட்சியர் ரவிசந்திரன் கிராம நிர்வாக அலுவலர் கலைச்செல்வியை பணியிடை நீக்கம் செய்தார். இதே போல் அன்னூர் வட்டாட்சியர் ரத்தினம் ஒட்டர் பாளையம் கிராம உதவியாளர் முத்துச்சாமியை பணியிடை நீக்கம் செய்தார்.
இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க அன்னூர் காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
ஒட்டர் பாளையம் கிராம நிர்வாக அலுவலகத்தில் நடந்த சம்பவத்தை செல்போனில் பதிவு செய்து தவறான நோக்கத்துடன் சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட நபர் குறித்தும் அன்னூர் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.