கோவை: அன்னூர் ஒட்டர் பாளையம் சம்பவத்தில் முழுமையான விசாரணை நடத்திடவும், உண்மைகளை மறைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) கோவை மாவட்ட குழு சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் அன்னூர் ஒட்டர் பாளையம் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலகத்தில், உதவியாளராக பணியாற்றி வந்த முத்துசாமி என்ற பட்டியலினத்தைச் சேர்ந்த கிராம உதவியாளரைக் காலில் விழ வைத்த வீடியோ 06-08-2021 அன்று இரவு முதல் சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவியது.
முதற்கட்ட தகவல்களின் அடிப்படையில் சாதிய வன்கொடுமை என்ற வகையில் அதனை ஊடகங்களும் பதிவு செய்தன. இதன் காரணமாக வன்கொடுமை சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
மாவட்ட வருவாய்த்துறை சார்பாக அச்சம்பவம் குறித்து விசாரணை நடை பெற்றது. விசாரணைக் குழு முன்பாக ஆஜரான ஒட்டர் பாளையம் கிராம நிர்வாக அலுவலரும், கிராம உதவியாளரும் தெரிவித்த தகவல்கள் அடிப்படையில் விவசாயி கோபால்சாமி மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஒரு புதிய வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. அதில் தனது நிலத்தின் பட்டா மாறுதலுக்காகக் கிராம நிர்வாக அலுவலரை விசாரிக்க கோபால்சாமி சென்ற போது, அவரை கிராம உதவியாளர் முத்துசாமி அவதூறான வார்த்தை பேசி தாக்கியது, அதன் பிறகு காலில் விழுந்து மன்னிப்பு கேட்பது போலச் செய்ததும் வெளியாகி உள்ளது.
பத்திரிக்கையாளர் என்ற போர்வையில் ஒருவர் இந்த விவகாரத்தில், இரண்டு வீடியோக்கள் எடுத்து அதில் பிரச்சனைக்குரிய ஒரு சம்பவத்தைப் பதிவு செய்திருந்த வீடியோவை மட்டும் வெளியிட்டு உள்ளார்.
தவறான உள்நோக்கத்தோடும், சுய ஆதாயத்திற்காகவும், அந்த நபர் இச்செயலில் ஈடுபட்டுள்ளார். இது போன்ற செயல்கள் சமூக அளவில் பதற்றதை உருவாக்கும் என்பதை அறிந்தும் அதைச் செய்து உள்ளார்.
மேலும் அரசு அமைத்த விசாரணைக்குழுவின் முன்பு கிராம நிர்வாகி அதிகாரி மற்றும் உதவியாளர் ஆகியோர் உண்மை சம்பவத்தை மறைத்துள்ளனர்.
எனவே மாவட்ட நிர்வாகம், இந்த சம்பவத்தில் முழுமையான விசாரணை நடத்தி தவறான வீடியோவை வெளியிட்ட நபர் மீதும், உண்மை சம்பவத்தை மறைத்த அரசு ஊழியர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) கோவை மாவட்ட குழு சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எப்போதும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக நிற்கும் என கோவை மாவட்ட குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.