கோவை: சிங்காநல்லூரில் புதிய 'இ சேவை மையம்' மையத்தை சட்டமன்ற உறுப்பினர் ஜெயராம் துவக்கி வைத்தார்.

கோவை மாவட்டம் சிங்காநல்லூரில் புதிய இ-சேவை மையம், இளைஞர்களுக்கு கிரிக்கெட் உபகரணங்கள் வழங்கல், மலை ஏற்ற வீரருக்கு நிதி உதவி, மரக்கன்று நடுதல் என்பது உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் 'அதிமுக' சட்டமன்ற உறுப்பினர்., ஜெயராம் பங்கேற்றார்.
இதுகுறித்து சட்டமன்ற உறுப்பினர் ஜெயராம் கூறியதாவது:-

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதியில் பணியாற்ற வாய்ப்பு அளித்த மக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை நன்றி. தேர்தலின் போது மக்களுக்கு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன.
முதல் கட்டமாக பொதுப் பிரச்சினைகள் குறித்து மக்கள் தகவல் தெரிவிக்க உதவும் வகையில் 'வாட்ஸ் அப் எண்' அறிமுகம் செய்யப்பட்டது. மக்கள் மத்தியில் இதற்கு நல்ல வரவேற்பு உள்ளது.
தெரு விளக்கு எரியவில்லை, சாக்கடை கால்வாய் பிரச்சினை உள்ளிட்ட புகார்களுக்கு உடனடியாக தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. தவிர பல்வேறு கோரிக்கைகள் குறித்து மாநகராட்சியின் கவனத்திற்கு அவற்றைக் கொண்டு பிரச்சனைகளுக்குத் தீர்வு காண நடவடிக்கை மேற்கொண்டு வருகிறேன்.

75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு நேற்று சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கொடி ஏற்றி வைத்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, இரண்டாவது தேர்தல் வாக்குறுதி 'இ சேவை மையம்' நேற்று திறக்கப்பட்டது.

இது தவிர இளைஞர்களுக்கு கிரிக்கெட் உபகரணங்கள் வழங்கப்பட்டன. மலையேற்ற வீரர் ஒருவருக்கு சொந்த நிதியிலிருந்து நிதி உதவி வழங்கி உள்ளேன்.

சிங்காநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட சவுரி பாளையம் பகுதியில் உள்ள உடையாம்பாளையம் அரசுப் பள்ளியில், சிலம்பாட்ட நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ மாணவியருக்கு பரிசு வழங்கப்பட்டது. தொடர்ந்து மரக்கன்றுகள் நடப்பட்டன.
இவ்வாறு அவர் கூறினார்.