பொள்ளாச்சி: புதிய ஓய்வூதியம் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழக அரசு ஊழியர்களுக்கான புதிய ஓய்வூதியம் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், நிறுத்திவைக்கப்பட்டுள்ள அகவிலைப்படி வழங்க வேண்டும், உள்ளிட்ட அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று கூறி, பொள்ளாச்சி தாலுகா அலுவலக வளாகத்தில் இன்று, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க வட்ட கிளை துணைத்தலைவர், சுப்பிரமணி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, வட்ட கிளை செயலாளர் மாரிமுத்து, பள்ளிக் கல்வித் துறை மாவட்ட தலைவர் காளிமுத்து, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது திமுக அரசு, தேர்தல் வாக்குறுதியில் கூறியதுபோல, அரசு ஊழியர்களுக்கான நலத் திட்டங்களை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர்.
தமிழகச் சட்டமன்ற கூட்டத்தொடரில் அரசு ஊழியர்கள் சங்கத்தின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்த்த நிலையில், இது தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியிடப்படாததால், தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அனைத்து வட்ட கிளைகளிலும் ஆர்ப்பாட்டம் நடத்தி உள்ளதாக அரசு ஊழியர் சங்கத்தினர் தெரிவித்தனர்.