கோவையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு சர்க்கரை நோய் குறித்து விழிப்புணர்வு பேரணி - 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!

கோவை: கோவையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு சர்க்கரை நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக 200 -க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட சைக்கிள் பேரணி நடைபெற்றது.


கோவை: கோவையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு சர்க்கரை நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக 200 -க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட சைக்கிள் பேரணி நடைபெற்றது. இதில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கலந்து கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

கோவை வெஸ்டர்ன் வேலியும், லையன்ஸ் கிளப்பும் இணைந்து சர்க்கரை நோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியை தொடங்கியுள்ளனர்.

ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு 100 கி.மீ சைக்கிள் பயண நிகழ்வை புட்டு விக்கி பாலத்தில் இருந்து துவங்கி பேரூர், பச்சாபாளையம், மாதம்பட்டி, தொண்டாமுத்தூர், கோவை குற்றாலம், சாடிவயல் மீண்டும் அதே வழியாக புட்டுவிக்கி ஜெ.பி ஃபார்ம்ஸில் 100 கிலோமீட்டர் முடிவடைந்தது.

இந்தப் பயணத்தில் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை 200 -க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த பயணமானது காலை 5.30 மணி அளவில் நடைபெற்றது. சைக்கிள் பயணத்தின்போது விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

Newsletter

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...