கோவை: கோவை வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழா கொண்டாட்டத்தில் கிராம உதவியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

கோவை பாலசுந்தரம் சாலையில் வடக்கு வட்டாட்சியர் அலுவலகம் உள்ளது. அங்கு 75வது சுதந்திர தின விழாவையொட்டி, கோவை வடக்கு மாவட்ட ஆட்சியர் கோகிலா மணி தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
கோவை வடக்கு வருவாய் கோட்டாட்சியர் ரவீந்திரன் தலைமை தாங்கினார். பின்னர் வட்டாட்சியர் கோகிலா மணி முன்னிலை வகித்து, இருவரும் இணைந்து கொரோனா பெரும் தொற்று காலத்தில் நோய் தடுப்பு பணியில் ஈடுபட்ட கோவை வடக்கு வட்டத்தில் பணிபுரியும் கிராம புற உதவியாளர்கள் சுமார் 50 -க்கும் மேற்பட்டவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்தைச் சேர்ந்த குடும்பத்தினர் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். அலுவலர்கள், உதவி துணை வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.