கோவை: கோவை கிணத்துக்கடவு அருகே கோவில்பாளையத்தில் பூச்சி மருந்து குடித்து சிகிச்சை பெற்று வந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள முஸ்லிம் கோவில்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அப்துல் மத்தீன் (65). இவர் கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 6ம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சி மருந்து குடித்து அப்துல் மத்தீன் மயங்கி விழுந்த அவரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதையடுத்து, அங்கு மருத்துவர்கள் அப்துல்மத்தீனுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில், சிகிச்சை பெற்று வந்த அப்துல் மத்தீன் நேற்றிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து அப்துல் மத்தீன் மகன் சையது முகம்மது இன்று கிணத்துக்கடவு காவல்துறையில் புகார் அளித்தார்.
இதனை தொடர்ந்து, புகாரை பெற்றுக்கொண்ட கிணத்துக்கடவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.