கோவை: கோவை கிணத்துக்கடவு ஆர்.எஸ்.சாலையில் இருசக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் கல்லூரி மாணவன் படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள லட்சுமி நகரைச் சேர்ந்தவர் மகேந்திரன் (39) கூலி தொழிலாளி. இவர் தனது இருசக்கர வாகனத்தில் தனது மகள் அட்சயா (9), மகன் மதன் (5) ஆகியோருடன் கடந்த 12ம்தேதி லட்சுமி நகரில் இருந்து கிணத்துகடவு நோக்கி வந்து கொண்டிருந்தார்.
அப்போது, பின்னால் அதிவேகமாக வந்த மற்றொரு இருசக்கர வாகனம் மகேந்திரன் வந்த வாகனத்தின் பின்பக்கம் பலமாக மோதியது.
இதில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த மகேந்திரன் அவரது மகள் அக்சயா, மகன் மதன் ஆகியோர் லேசான காயம் அடைந்தனர். மகேந்திரன் வாகனம் மீது மோதிய வாலிபர் பலத்த காயம் அடைந்தார்.
பின்னர், இதுகுறித்து தகவல் அறிந்ததும் அக்கம்பக்கத்தினர் விபத்தில் காயமடைந்த மகேந்திரன் இவரது மகள் அக்சயா, மகன் மதன் ஆகிய 3 பேரும் பொள்ளாச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
சிகிச்சை முடிந்து வீடு திரும்பி மகேந்திரன் விபத்தை ஏற்படுத்தியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நேற்று புகார் அளித்தார்.
பின்னர் விசாரணை நடத்திய போலீசார் இருசக்கர வாகனம் மீதி மோதி விபத்தை ஏற்படுத்திய வாலிபர், கிணத்துக்கடவு அருகே உள்ள சேரிபாளையம் விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்த ஹரிகரன் (18) என்பதும் அவர் ஈச்சனாரியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தது தெரியவந்தது
இதையடுத்து, ஹரிஹரன் தற்போது கோவை ஈச்சனாரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.