மூன்று மாதங்களுக்கு பின் கோவையில் இருந்து ஷார்ஜா செல்ல பயணிகளுக்கு அனுமதி: 'ஏர் அரேபியா' விமானம் 'ஹவுஸ்புல்'..!

கோவை: கொரோனா நோய் தொற்று பரவலுக்கு பின் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு விமானங்களை இயக்க இந்திய அரசு தடை விதித்துள்ளது.


கோவை: கொரோனா நோய் தொற்று பரவலுக்கு பின் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு விமானங்களை இயக்க இந்திய அரசு தடை விதித்துள்ளது.

இருப்பினும் 'வந்தே பாரத் திட்டத்தின்' கீழ் இயக்கப்படும் விமானங்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், வெளிநாட்டு ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்கு விமான சேவைகளை வழங்கி வருகின்றன.

இதனிடையே, கோவை விமான நிலையத்தில் இருந்து இலங்கை, சிங்கப்பூர் மற்றும் ஷார்ஜாவுக்கு விமான சர்வீஸ் வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 'ஏர் அரேபியா' நிறுவனம் சார்பில் மட்டும் வாரத்தில் மூன்று நாட்கள் ஷார்ஜா- கோவை இடையே விமான சேவை வழங்கப்படுகிறது.

பயணிகளை இந்தியாவிலிருந்து ஏற்றி வர அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ள காரணத்தால் தற்போது மீண்டும் கோவையிலிருந்து பயணிகள் ஷார்ஜா செல்ல துவங்கியுள்ளனர்.

இது குறித்து ஏர்போர்ட் வட்டாரங்கள் கூறியதாவது:

கொரோனா நோய்த்தொற்று பரவல் அதிகரித்த காரணத்தால் கடந்த மூன்று மாதங்களுக்கு முன் ஷார்ஜா- கோவை இடையே இயக்கப்பட்டு வரும் விமானத்தில் அங்கிருந்து பயணிகளை மட்டும் ஏற்றி வர அனுமதி அளிக்கப்பட்டது.

கோவையிலிருந்து மீண்டும் திரும்பி செல்லும்போது கார்கோ மட்டுமே கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டது. தற்பொழுது அந்நாட்டு அரசு பயணிகளை ஏற்றி வர அனுமதி அளித்துள்ள காரணத்தால், கோவையிலிருந்து ஷார்ஜாவுக்கு இயக்கப்படும் விமானத்தில் பயணிகள் செல்ல துவங்கியுள்ளனர்.

தற்பொழுது வாரத்தில் மூன்று நாட்கள் கோவை- ஷார்ஜா இடையே சர்வீஸ் வழங்கப்படுகிறது. மொத்தம் 162 பயணிகள் பயணிக்க கூடிய இந்த விமானம், ஒவ்வொரு முறையும் ஹவுஸ்ஃபுல் ஆகவே செல்கிறது. தவிர ஒவ்வொரு முறையும் குறைந்தது 3 டன் மற்றும் அதற்கு மேல் கார்கோ ஏற்றி செல்லப்படுவது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு, ஏர்போட் வட்டாரங்கள் தெரிவித்தன.

Newsletter

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...